பழங்கள் உண்ணும் முறை

பழங்கள் உண்ணும் முறை

ஆரஞ்சு பழச்சாற்றை எடுக்கும் போது அதன் தோளில் ஒருவகை எண்ணெய்யும் அதில் கலந்து விடுகிறது.

 பப்பாளி பழம் மற்றும் காயை கூட்டுக்கறி தயிர் பச்சடி முதலியவை செய்யலாம் .சற்று நொடி அடிக்கும் வேகவிட்டு நீரை வடித்து விட்டால் நெடி போய்விடும் .

பலாச்சுளைகளை அதிகம் உட்கொள்வதால் விளையும் வயிற்று கோளாறுகளைப் போக்க பலாக்கொட்டைகளை வறுத்து பொடித்து உப்பு ஓமமும் சேர்த்து வெந்நீரில் கலக்கி சாப்பிட்டால் கோளாறுகள் குணமாகும்.

 சாதாரணமாக ஆப்பிள் சாப்பிடும் போது தோலை உமிழ்ந்து விடுவார்கள் ஆனால் தோளிலும் அதை ஒட்டிய பகுதியிலும் தான் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகமாக இருக்கிறது.

 தோலுடன் சேர்த்தும் பழத்தை சாப்பிட்டால் பல் ஈறில் இருந்து வரும் ரத்தமும் நின்றுவிடும்.

 எலுமிச்சம் பழத்தை அனேக விதமாக பயன்படுத்துகிறார்கள் ஆனால் இதை நீரில் பிழிந்து சாப்பிடுவதுதான் சிறந்த முறை .

வெள்ளரிக்காயோ அல்லது பழமோ அதிகம் சாப்பிட்டால் வயிற்று கோளாறு ஏற்படும்.
 சுக்கு உப்பு மிளகு பொடி வீட்டில் ஏதாவது ஒன்றை சேர்த்துக் கொள்வது நல்லது.

கருத்துரையிடுக

புதியது பழையவை