பழைய சோறு புதிய செய்தி
பழைய சோறு பச்சை மிளகாய் கடந்து சில ஆண்டுகளுக்கு முன்பு ட்ரெண்டிங் ஆன ஒரு இனிய பாடல்.
இந்த பாடலைப் போலவே இந்த காம்போவும் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
இப்போது இருக்கும் 2Kகிட்ஸ்க்கு தெரியுமோ? தெரியாதோ? அதற்கு முன்பு பிறந்த 90 கிட்ஸ் 80 கிட்ஸ் 70 கிட்ஸ் என எல்லா கிட்ஸுக்கும் பழைய சோறு பச்சை மிளகாய் காம்போ இல்லாமல் அன்று என்னால் தொடங்கி இருக்காது .
ஆனால் கால ஓட்டத்தில் பழைய சோறு இப்போது காலாவதியாகும் ஃபுட் லிஸ்டில் சேர்ந்து வருகிறது .
என்ன இருந்தாலும் பழைய சோற்றின் மகிமை அறிந்த பலர் அது இன்னமும் தங்களது மார்னிங் பிரேக் பாஸ்ட் ஆகவே தொடர்ந்து வருகிறார்கள்.
சாதாரண ஹோட்டல் துவங்கி ஸ்டார் ஹோட்டல் வரை பழைய சோற்றை இப்போது விற்க துவங்கி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த அரசு மருத்துவமனையான ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பழைய சாேற்றை பரிந்துரைத்து வருகிறார்கள் .
அதுவும் குடல் நோய்களால் அவதிப்படும் நோயாளிகளுக்கு பழைய சோற்றை வழங்கி நல்ல ரிசல்ட் பெற்று வருகிறார்கள்.
பழைய சோறு சாப்பிடும் குடல் பாதிப்பு கொண்ட நோயாளிகளுக்கு அந்த பிரச்சனை சரியாகி வருவதாகவும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து இருக்கிறார்கள்.
ஸ்டான்லி மருத்துவமனையின் இரப்பை, குடல் அறுவை சிகிச்சை தலைவர் ஐஸ்வந்த் கூறும் இது குறித்த தகவல் பழைய கஞ்சி சாப்பிடுபவர்களுக்கு ஒரு எக்ஸ்ட்ரா தெம்பு வருவதாக இருக்கிறது.
ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு குடலில் உள்ள அலர்ஜி புண்கள் காரணமாக குடல் புண்ணாகி அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை இருந்தது. ஆனால் பழைய சோற்றை கொடுத்து அறுவை சிகிச்சையே இல்லாமல் அவர்களை காப்பாற்றி வருகிறோம்.
இதற்காக தமிழக அரசு சார்பில் ரூபாய் 2.77 கோடியை நிதி உதவி பெறப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு அவர்களின் உணவு பழக்கத்தில் தான் குடல் நோய் வந்தது தெரிய வந்தது.
இதனால் சிறிய மண்பானையில் பழைய சோற்றை வழங்கினோம்.
அவர்கள் தற்போது உடல் நலம் பெற்று இருக்கிறார்கள் .
பழைய சோற்றில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் எத்தனை சதவீதம் இருக்கின்றன என்பதை துல்லியமாக அறிந்து கொள்வதற்கான ஆராய்ச்சிகள் தற்போது நடந்து வருகின்றன.
இந்த கஞ்சியை நீரழிவு நோயாளிகள் சாப்பிட்டால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
பழைய மண் சட்டியில் வைத்து சாப்பிட்டால் இது எளிதில் ஜீரணம் ஆகும்.
எண்பது சதவீத குடல் நோய்களுக்கு அருமருந்தாக பழைய சோறு விளங்குகிறது என்கிறார் டாக்டர் ஜஸ்வந்த்.