தர்பூசணியின் நன்மைகள்
குறைவான விலையில் நிறைவான பலன் தருவது தர்பூசணி.
அதிக நீர்ச்சத்து கொண்ட தர்பூசணி கோடைக்கேற்ற சஞ்சீவியாக பல பலன்களை தருகிறது.
தர்பூசணியின் வேறு பயன்கள் பற்றி தெரிந்து கொள்வாேம்.
இதய நலனை காக்கும்
தர்பூசணியில் லைகோபீன் என்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிக அளவில் உள்ளது .
இது ஃபிரிராடிக்லால் உண்டாகும் தீமைகளை குறைக்கும் தன்மை கொண்டது.
இதயத்தை இளமையாக வைத்துக் கொள்ள உதவும்.
தர்பூசணியில் பொட்டாசியம் அதிக அளவு உள்ளது.
இது மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கும்.
இதயத் துடிப்பை சீராக்கும் .
புற்றுநோய் வராமல் தடுக்கும்
தர்பூசணியில் உள்ள லைகோபின் மார்பு, நுரையீரல், கர்ப்பப்பை, பெருங்குடல் போன்ற இடங்களில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கும்.
கண்களைப் பாதுகாக்கும்
தர்பூசணியில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, லூட்டின், சியாக்சன்தின் போன்ற ஆண்டி ஆக்சிடென்ட்கள் அதிக அளவில் உள்ளன.
இது மாலைக்கண் நோய், கண்விழி மிக அழுத்த நோய் போன்றவற்றிலிருந்து கண்களை பாதுகாக்கும்.
நீர் இழப்பு பிரச்சனைகள் ஏற்படாமல் சருமத்தை பாதுகாக்கிறது.
தர்பூசணி உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்
தமனிகள் சிறப்பாக செயல்பட உதவும்.
எலும்புகளை பாதுகாத்து ஆஸ்டியோபோரோசியை தடுக்கிறது.
தர்பூசணியில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
காயங்களை விரைவாக ஆற்றும் குணம் இதற்கு உண்டு.
தர்பூசணையை தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.
இதில் உள்ள பீட்டா கரோட்டின் சருமத்திற்கு மிகவும் நல்லது.
முகப்பரு பிரச்சனையை சரி செய்கிறது.
தர்பூசணியில் வைட்டமின் பி6 நிறைந்துள்ளது .
இது நமது மூளையில் பல வேதிப்பொருட்களை உற்பத்தி செய்ய உதவக்கூடியது.
இந்த வேதிப்பொருட்கள் தான் நமது நடவடிக்கை மற்றும் மனநிலைக்கு காரணமாக அமைகின்றன.
இதைத் தொடர்ந்து சாப்பிடுவதால் மன அமைதியை தருகிறது.
சிறுநீரகத்தை பாதுகாக்கும்
சிறுநீர் வெளியேறும் போது சிரமம் கொடுக்கும் அமோனியம் அமோனியாவை கல்லீரலில் இருந்து வெளியேற்ற இது உதவும்.
மலச்சிக்கலுக்கு மருந்தாகுவதோடு, நெஞ்செரிச்சலையும் சரி செய்கிறது.
இவ்வாறு பல நன்மைகள் தரும் தர்பூசணியை கோடையில் எடுத்து கொள்ள உடல் ஆரோக்கியம் மேம்படும்.