கீரைகளின் பயன்பாடுகள்

கீரைகளின் பயன்பாடுகள்

அகத்திக்கீரை 
உடல் உஷ்ணத்தை தணிக்கும் .
பித்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குறைக்கும் வல்லமை வாய்ந்தது.

 அரைக்கீரை 
உடலில் உள்ள நச்சுக்களை முறிக்கும். தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான தீர்வைத் தரும் .

மணத்தக்காளி கீரை 
அல்சர் என்னும் வயிற்றுப் புண்களை குணப்படுத்தும். 
குடல் புண்களை ஆற்றுவதால் குடலுக்கு பல பலம் கிடைக்கும்.
அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதினால் பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறு தணியும்.

 முருங்கைக்கீரை 
அதிக அளவில் இரும்பு சத்துக் கொண்டது. 
உடல் உஷ்ணம் தணிக்கும்.
 வயிற்றுப்புண் ஆற்றும். 
அத்துடன் இருதய நோய்கள் வராமல்  பாதுகாத்து ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

 பசலைக்கீரை 
பாலக்கீரை என்றும் அழைக்கப்படும் இக்கீரை உடலுக்கு வலிமை தரக்கூடியது.
 மேலும் மலச்சிக்கலை போக்குவதோடு குடல் நோய்கள் எதுவும் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

 சிறுகீரை 
உடலுக்கு ஊக்கத்தை தந்து தளர்ச்சியை போக்கும்.
 குடல் புண்களை ஆற்றும்.
 குடலுக்கு வலிமை தரும்.
 மலச்சிக்கலை போக்கும்.
 இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் பித்தம் குறையும்.

 வெந்தயக்கீரை 
உடலுக்கு ஊக்கத்தை அளிப்பதோடு வயிற்றுப் புண்களை ஆற்றும்.
 பேதியை குறைக்கும் .
அதிகமான இரும்பு சத்து கொண்டது.
 கண்கள் தொடர்பான நோய்களை தீர்க்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை