வாழைக்காய் + வாயு = வதந்தி
இயற்கை வைத்தியம் என்பது நம்முடைய முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்த உணவே மருந்து என்னும் அடிப்படையிலான இயற்கை மருத்துவ முறையாகும்.
இதன் அடிப்படையான விஷயம் நாம் சாப்பிடும் உணவே நம்முடைய நோயை தீர்க்கும் மருந்தாக பயன்படுவதுதான்.
நம் முன்னோர்கள் உடலுக்கு எது நன்மையோ அதையே தங்களுடைய உணவு முறையாக பின்பற்றி வந்தனர்.
அப்படி பார்க்கும்போது வாழைக்காயில் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருந்தாலும், வாழைக்காயை சாப்பிட்டால் வாயு தொல்லை உண்டாகும் எனும் ஒரு வதந்தி இருக்கிறது .
நம் முன்னோர்கள் வாழைக்காயை பல்வேறு நோய்க்கு மருந்தாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
அதனை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம் .
ஊட்டச்சத்துக்கள்
வாழைக்காயில் மிக அதிக அளவில் இரும்பு சத்து நிறைந்திருக்கிறது.
உணவில் வாழைக்காயை சேர்த்துக் கொண்டால் உடல் வளர்ச்சி அதிகரிக்கும் .
நீரழிவு
வாழைக்காய் உணவில் சேர்த்துக் கொண்டால் பசி மிக விரைவாக அடங்கிவிடும் .
நீரிழிவு நோய் உள்ளவர்கள் வாழைக்காயில் சீரகமும், மிளகும் சேர்த்து சாப்பிட்டால் உடலில் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் கொண்டிருக்கும்.
ரத்த விருத்திக்கு
வாழைக்காயின் மேல் தோலை மட்டும் சிவி சமைத்தால் அதில் உள்ள நார்ச்சத்து முழுமையாக நம் உடலுக்கு வந்து சேரும்.
வாழைக்காயின் மேல் தோலை மெலிதாக சீவி எடுத்து அதை சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வதைக்கி வைத்துக் கொண்டு அதனுடன் ஒரு ஸ்பூன் உளுந்து, சிறிது சீரகம், மிளகாய் வற்றல், பூண்டு நான்கு பல், உப்பு, நெல்லிக்காய் அளவு புளி ஆகிவற்றை சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும் .
வயிறு இரைச்சல், வாயில் எச்சில் ஊறுதல் ,வயிற்றுப்போக்கு குணமாகும்.
வயிற்றுப்போக்கு
வாழை பிஞ்சினை நெய்யில் வதக்கி சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு உடனடியாக நிற்கும்.
ஏப்பம்
சிலருக்கு அடிக்கடி தொடர்ந்து ஏப்பம் வந்து கொண்டே இருக்கும்.
அதற்கு மிக முக்கியமான காரணமே அஜீரண கோளாறு தான்.
வாழைக்காயினை சின்ன சின்ன வில்லைகளாக வெட்டி வெயிலில் நன்கு உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும்.
இந்த பொடியை பாலில் கலந்து குடித்து வர அஜீரண கோளாறு நீங்கும்.
உலர்த்திய வாழைக்காயுடன் சிறிது உலர்ந்து மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து அரைத்து இட்லி பொடி போலவும் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வரலாம் .
வயிற்று கடுப்பும் தீரும்.