கொளுத்தும் வெயிலுக்கு குளு குளு மாஸ்குகள்
கோடை காலம் வந்துவிட்டாலே உடல் மட்டுமல்ல சருமமும் சோர்வடையும்.
குறிப்பாக முகத்தின் சருமம் உடலின் மற்ற சருமத்தை காட்டிலும் மென்மையாக இருப்பதால் அதீத அளவில் ஈரப்பதத்தை இழந்து சோர்வுக்கு வரும்.
இதோ குளுகுளுவென சில வீட்டிலேயே செல்லக்கூடிய இயற்கையான மாஸ்க்குகள்.
1. ஐந்து அல்லது ஆறு பப்பாளி தூண்டுகள், அரை வாழைப்பழம், அரை டீஸ்பூன் தேன் அனைத்தையும் நன்றாக மசித்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் வெயிலினால் இழந்த ஈரப்பதமும் பளபளப்பும் மீண்டும் கிடைக்கும்.
2. மூன்று டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறு மற்றும் கால் கப்பு தேன் இரண்டையும் நன்றாக கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம். இதனால் முகம் பிரகாசமாகவும் இழந்த பாெழிவை மீண்டும் பெறவும் முடியும்.
3. கற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சை பழச்சாறு இரண்டையும் ஒன்றாக கலந்து முகத்தில் பூசி பத்து நிமிடங்கள் கழித்து முகத்தை அலசலாம். கற்றழையால் வெயிலால் உண்டாகும் எரிச்சல் மற்றும் நிறம் கருத்து போதல் உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்யும். எலுமிச்சை பழத்தால் முகத்தில் படிந்து அழுக்குகள் மறைந்து முகம் புத்துணர்ச்சி பெறும். பருக்கள் சருமம் கொண்டவர்கள் எலுமிச்சை பழத்தை தவிர்க்கவும்.
4. ஒரு டேபிள் ஸ்பூன் முல்தானிமட்டி, ஒரு டேபிள் ஸ்பூன் பால், ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் இவற்றை நன்றாக கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம். அதீத எண்ணெய் பசை உள்ள சருமம் மற்றும் வியர்வியால் சரும துவாரங்களில் உள்ள அழுக்கு இவற்றையெல்லாம் நீக்கி புத்துணர்ச்சியும், பிரகாசமும் கொடுக்கும் மாஸ்க் இது.
5. வெயிலால் உண்டான கருமை மற்றும் சோர்வடைந்த சருமத்திற்கு சந்தனத்தை கல்லில் உரசி அதனுடன் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசி காய்ந்தவுடன் கழுவலாம். இதனை தொடர்ந்து செய்து வர வெயிலால் உண்டாகும் கருமை நீங்கி பிரகாசம் பெறும்.