வயதானவர்களும் எளிதாக பயணம் செய்யலாம்

வயதானவர்களும் எளிதாக பயணம் செய்யலாம்

கோடை விடுமுறை தொடங்கியாச்சு எங்கு சுற்றலாம் ? எங்கு போகலாம்? என்று எல்லாரும் திட்டம் போட ஆரம்பித்து இருப்பார்கள் .

பயணம் செய்யும் முன் என்னவெல்லாம் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும் என ஒரு பெரிய லிஸ்ட்டே போடுவோம்.

 எல்லாவற்றையும் விட இப்போது உள்ள தொழில்நுட்பத்தில் எங்கு தங்கலாம்? எப்படி பயணம் செய்யலாம்? என அனைத்தையும் நம் விரல் நுனியில் கொண்டு வந்து விடுகிறது .

20 முதல் 40 வயதிற்குள் இருப்பவர்கள் செல்போனிலேயே அனைத்தையும் சுலபமாக பார்த்து அதன்படி சுற்றுலா வினை கழிக்க திட்டமிடுவார்கள்.

 அவர்கள் மட்டும்தான் விடுமுறையினை கழிக்க முடியுமா என்ன? வயதானவர்களாலும் இதனை பின்பற்றி தங்களின் சுற்றுலாப் பயணத்தை எந்தவித தடை இன்றி இன்பமாகக் கழிக்க முடியும் என்கிறார்கள் ஃபேர்போர்டல் நிறுவத்தினர் .

உலகளவில் தொழில்நுட்ப உதவியுடன் அனைவரும் சுற்றுலா மேற்கொள்ள உதவும் இந்த நிறுவனம்.

 வயதானவர்கள் தங்களின் பயணத்தை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பது குறித்து சில ஆலோசனைகள் வழங்கியுள்ளனர் :

உங்களின் பயணத்தை உங்களுக்கு ஏற்ப அமைத்துக் கொள்வது அவசியம்.

 சில சமயம் நீங்கள் திட்டமிட்ட தேதியின் முன்பின் இருந்தாலும் அதனால் ஒரு குறிப்பிட்ட தொகை சேமிக்க முடியும் என்றால் அதன்படி திட்டமிடுங்கள்.

 பொதுவாக வார இறுதி நாட்கள் தான் பயணம் மேற்கொள்வார்கள்.

 வயதானவர்களுக்கு அலுவலகம் செல்ல வேண்டும் ,குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகள் கிடையாது.

 அதனால் ஆட்டுமந்தை கூட்டத்திற்கு நடுவில் வார இறுதி நாட்களில் சிக்கிக் கொள்ளாமல் வார நாட்களில் ரிலாக்ஸ் ஆகவும், ஃப்ரீயாகவும் சுற்றி பார்க்கலாம் .

சீசனின் போது கூட்டம் அதிகமாக இருக்கும்.

 தங்குவதற்கான ஓட்டல் அறைகள் கிடைக்காது .

அப்படியே கிடைத்தாலும் அதன் விலை மற்ற நாட்களை விட இரண்டு மடங்கு இருக்கும்.

 இதை தவிர்க்க ஆப் சீசனில் பயணிக்கலாம்.

 சீசன் ஆரம்பிக்க இருக்கும் ஒரு வாரமோ அல்லது முடிந்த அடுத்த வாரம் கூட திட்டமிடலாம் பணமும் மிச்சமாகும்.

 அதே சமயம் கூட்ட நெரிசல் இல்லாமல் அழகான இடங்களை தனிமையில் கண்டு மகிழலாம்.

 சமூக வலை தளத்தின் வளர்ச்சி காரணமாக ட்ராவல் ஏஜென்சிகள் பலர் அதிகரித்துவிட்டனர் .

இவர்கள் செல்லும் இடம், அங்குள்ள வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பதிவிடுகிறார்கள்.

 அதைப் பின்பற்றி திட்டமிடலாம்.

 நம்மூரில் கார், ஆட்டோ மற்றும் உணவுக்கு என தனிப்பட்ட ஆட்கள் உள்ளன .

அதேபோல் நாம் செல்லும் ஊர்களிலும் இருக்கும் அவை என்னவென்று அறிந்து அதன் மூலம் நீங்கள் சுற்றிப் பார்க்க இருக்கும் இடங்களுக்கு செல்ல திட்டமிடலாம் .
இனி என்ன யோசனை உங்களின் கோடை விடுமுறையினை ஜாலியாக கொண்டாடலாமே!

கருத்துரையிடுக

புதியது பழையவை