கஸ்தூரி மஞ்சள் செய்யும் மாயாஜாலம்
மஞ்சளில் ஏராளமான ஆரோக்கிய குணங்கள் அடங்கியிருப்பது நம் அனைவருக்கும் தெரியும்.
பாக்டீரியா எதிர்ப்பு தன்மை, வயதான தோற்றத்தை குறைக்கும் திறன், வளர்ச்சியினை கட்டுப்படுத்துதல், என்று பல்வேறு நலன்கள் உள்ளது.
இதன் காரணமாக மஞ்சள் சரும ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது .
சிறிது மஞ்சளை தண்ணீரில் கலந்து சாப்பிட்டாலே உடலில் உள்ள புண்கள் ஆறும் .
அதேபோல் காட்டுமஞ்சள் என்று அழைக்கப்படும் கஸ்தூரி மஞ்சள் சரும நலன்கள் அடங்கியுள்ளது.
சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் இது தீர்வு அளிக்கிறது .
கஸ்தூரி மற்றும் இதர மஞ்சள்களின் வித்தியாசம்
கஸ்தூரி மஞ்சள் பார்க்க மஞ்சள் நிறத்தில் இருந்தாலும் மற்ற மஞ்சள் இலை போல் சருமத்தில் மஞ்சள் கறை படியாது.
இது வாசனை நிறைந்தது என்பதால் சருமத்தில் ஒருவித நறுமணம் கமிலச் செய்யும்.
சமையலுக்கு பயன்படுத்த முடியாது.
அழகு சாதன பொருட்களுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடியது.
இதில் பாக்டீரியா எதிர்ப்பு சக்தி இருப்பதால் சருமத்தில் முகப்பரு வராமல் தடுக்கிறது.
மேலும் சருமத்தில் உள்ள அதிக அளவு எண்ணெய் பசையினை குறைக்கிறது.
முகப்பரு உருவாகும் கிருமிகளை அழித்து பருகளால் ஏற்படும் தழும்பினை மறைய செய்கிறது.
ரோஜா பன்னிருடன் இதனை குழைத்து முகத்தில் பூசி வர சருமம் பளிச்சிடும்.
கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம் நீங்கும்.
முகத்தில் உள்ள சிறிய முடிகளை இயற்கையான முறையில் நீக்கும் தன்மை கொண்டது.
கொண்டைக்கடலை மாவுடன் கஸ்தூரி மஞ்சள் மற்றும் பால் சேர்ந்து கலந்து முகத்தில் தடவி உலர்த்தவும் மெதுவாக தேய்த்து தண்ணீரால் கழுவினால் முடிகள் உதிர்ந்து விடும்.
கரும்புள்ளிகள் மற்றும் முகச் சுருக்கங்களை நீக்கி சருமத்தை பொலிவுடன் வைத்துக் கொள்ளும்.
தாத்ரி கஸ்தூரி மஞ்சள்
100% சுத்தமானது.
நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு எவ்வித ரசாயன கலப்படமும் இல்லாமல் தயாரிக்கப்படுகிறது.
இந்த கிழங்கு முதிர்ந்த பிறகு தான் பறிக்க வேண்டும் .
இளம் கிழங்கினை பறித்தால் அதை பொடியாக்க முடியாது.
அதே போல் நன்கு முதிர்ந்து விட்டால் அது மரமாகிவிடும் .
அதனால் கிழங்கின் இலை மஞ்சள் நிறமாக மாறியதும் அதன் தண்டு பகுதி காய்ந்து போகும் நிலையில் இருக்கும் போது கிழங்கினை அறுவடை செய்ய வேண்டும்.
அவ்வாறு அறுவடை செய்யப்பட்ட கிழங்குகள் ஆய்வுக்கூடத்தில் தரம் பார்த்து பிரிக்கப்பட்டு அதன் பிறகு அவை நிழலில் நன்கு உலர்ந்த பிறகு மிகவும் மிருதுவாக அரைக்கப்படும்.
இவை ஒவ்வொரு நிலையிலேயே கிடைக்கும் போதும் அதன் தரம் குறையாமல் பாதுகாக்கப்படுகிறது.
தாத்ரி கஸ்தூரி மஞ்சளிணை, தண்ணீரில் குழைத்து உடம்பில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவலாம் .
மிருதுவான சருமம் உள்ளவர்கள் தண்ணீருக்கு பதில் தேங்காய் எண்ணெய், தேங்காய் பால் தயிர் அல்லது பசும்பால் கலந்து பயன்படுத்தலாம்.