கருவளையம் நீங்க

கருவளையம் நீங்க
இரும்பு சத்து குறைகிற போது, பரம்பரை வழியால், போதிய தூக்கம் இன்மையால், அளவுக்கு அதிகமான கண்களுக்கு வேலை கொடுப்பது, நீண்ட நேரம் கம்ப்யூட்டர், டிவி முன்னாடி உட்கார்ந்து இருப்பது, போசாக்கு இல்லாத ஆகாரம் சாப்பிடுவது போன்ற காரணங்களால் கண்களை சுற்றி கருவளையம் வருகிறது.

 புகைப் பழக்கமும், குடிப்பழக்கமும் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனை கண்டிப்பாக இருக்கும்.

 சருமத்திற்கு தேவையான வைட்டமின் சி,ஐ இந்த  பழக்கங்கள் குறைப்பதால் அதன் விளைவாக கருவளையம் தோன்றுகின்றன.

 கண்பார்வையில் கோளாறு உள்ளவர்களுக்கு கூட சில சமயம் இது மாதிரியான கருவளையங்கள் ஏற்படலாம் .

எனவே கண் பார்வைக்கான சிகிச்சை சரியாக மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இந்த பிரச்சனை குணமாக வாய்ப்புண்டு.

 தூங்கும்போது தலை - கீழாகவும் கால்கள் - மேலாகவும் இருக்கும் படி தூங்கினால் முகத்திற்கு ரத்த ஓட்டம் அதிகரிக்க வாய்ப்பு அதிகம் .

இதனால் கரு வளையங்கள் குறையும்.

 தலையணை இல்லாமல் தூங்கும் பழக்கமும் கருவளையங்களை குணமாக்குவதில் உதவும்.

 இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக கண்களில் போடப்பட்டுள்ள பேக்கப் அகற்ற வேண்டும் .

கண்களுக்கு உபயோகிக்கும் மேக்கப் சாதனங்கள் தரமானதாக இருக்க வேண்டியது முக்கியம்.

 வெயிலில் போகும்போது கண்களுக்கு குளிர் கண்ணாடிகள் அணிந்து செல்ல வேண்டும்.
 மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் கருவளையங்கள் வராமல் இருப்பதற்கு முக்கியம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை