நூல் கோல் சாப்பிடுங்க
எல்லா கடைகளிலும் நூல் கோல் காய் இருப்பதை கவனித்திருப்பீர்கள்.
ஒரு சிலரை தவிர அநேகம் பேர் அதனை தொட்டுக் கூட பார்க்க மாட்டார்கள்.
ஆனால் அந்த நூல் கோல் எத்தனை தூரம் மருத்துவ பயன்பாடு கொண்டது என்பதை அறிந்து கொண்டால் அதனை தவிர்க்கவே மாட்டீர்கள்.
ஆம்! வெங்காயத்தைப் போல தோற்றமளிக்கும் நூல் கோல் நீரழிவு நோயாளிகளுக்கு அதிக பயன் அளிக்கும் காயாகும் .
இதில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன .
வைட்டமின்கள், ஃபோலேட், நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பை 2 , கெமிக்கல்கள் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை இதில் உள்ளன.
இவையே இந்த காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாக இருப்பதற்கு காரணமாகும்.
இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகின்றன.
நூல் கோலை எப்படி பயன்படுத்துவது என்று தெரியவில்லை. அதனாலே வாங்க விரும்பவில்லை என்று பலரும் சொல்கிறார்கள்.
அதனை எப்படி எல்லாம் சாப்பாட்டில் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
நூல் கோல் கறி
நூல் கோல் சாப்பிடுவதற்கு மிகவும் பொதுவான வழி அதை கறியாக செய்து சாப்பிடுவது ஆகும்.
இதனை பீட்ரூட், முட்டைக்கோஸ் போன்றவைகளை போலவே சமைக்கலாம்.
மிகவும் சுவையாக இருப்பதோடு இதை மிக எளிதாகவும் சமைக்கலாம்.
சமைக்கும்போது எண்ணைய் பயன்படுத்துவதை குறைக்க முயற்சிக்கவும்.
நூல்கோல் ரைய்தா
காயாக இல்லாமல் நூல் கோழை வித்தியாசமாக சாப்பிட விரும்புவர்கள் இதனை தயிர் சேர்த்து ரைத்தவாக உட்கொள்ளலாம்.
இது மிகவும் ஆரோக்கியமானதாக இருப்பதோடு இது நீரழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தையும் நன்றாக வைத்திருக்கும்.
நூல் கோல் சூப்
குளிர்காலத்தில் சர்க்கரை நோயாளிகள் நூல் கோல் சூப் செய்து குடித்தால் குளுக்கோஸ் அளவை சீராக வைக்க அது உதவும்.
நூல் கோலை தவிர அதன் நிலைகள் தக்காளி, கேரட், மஞ்சள், பூண்டு, கருப்பு உப்பு மற்றும் சில மசாலா பொருட்களை சேர்ந்து இந்த சூப்பை செய்யலாம்.
நூல் கோல் சாலட்
சர்க்கரை நோயாளிகளுக்கு சாலட் வடிவில் நூல் கோழை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.
இதில் நூல் கோலுடன் தக்காளி, வெங்காயம், எலுமிச்சை சாறு, கருப்பு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.