எத்தனை ஆசை இருக்கலாம்
புத்தர் ஆசைப்படாது என்று சொல்கிறார்.
அப்துல் கலாம் ஆசைப்படுங்கள் என்கிறார்.
என்ன செய்வது என்று குழப்பமாக இருக்கிறதா?
மனிதராக பிறந்த அனைவருக்கும் ஆசைகள் இருக்கும்.
ஒருவருக்கு கார் வாங்க பிடிக்கும்.
இன்னொருவருக்கு இருசக்கர வாகனம் வாங்க பிடிக்கும்.
ஒரு ஆசை நிறைவேற்றி விட்டால் மனம் இன்னொரு ஆசைக்கு ஏங்கும். அதுதான் மனிதனது இயல்பு.
ஆசைகள் வேண்டும் அதுவே நமக்கு இயலாத நடக்காதவற்றுக்காக ஆசைப்படக்கூடாது. அதாவது பக்கத்து வீட்டுக்காரர் பெரிய பங்களா கட்டுகிறார் அவரைப் போல நானும் கட்ட வேண்டும் என்று நாம் ஆசைப்பட்டால் அது நம்மால் முடியுமா? என சற்று ஆலோசிக்க வேண்டும்.
அவரிடம் கோடி கோடியாக பணம் இருக்கலாம்.
யாராவது உறவுகள் கொடுத்து உதவலாம்.
ஆகவே நாம் நம்மை மட்டுமே யோசிக்க வேண்டும்.
நமது தகுதிக்கு ஏற்றுக்கு ஆசைப்படலாம்.
நமது விரலுக்கு ஏற்ற வீக்கம் அதுபோலத்தான்.
நாமும் வாழ பழக வேண்டும்.
பெண்கள் கூடுதலாக நகை, உடைகள் வாங்குவதற்கு ஆசைப்படுகிறார்கள்.
வீட்டில் வைத்திருக்கும் சேலைகள், நகைகளில் ஏனோ அவர்களுக்கு நிறைவு கிடைப்பதில்லை.
கையில் இல்லாத கடையில் இருக்கும் ஒன்றுக்கே ஆசைப்படுகிறார்கள்.
நம்மால் முடியாத ஒன்றுக்கு ஆசைப்படுவதை பேராசை என்று நினைத்து அதனை தவிர்க்க வேண்டும்.
மற்றவர்களிடம் வைத்திருக்கும் பொருட்கள் மீது மனம் ஆசைப்படுவதை தடுக்க வேண்டும்.
பிறருடன் ஒப்பிட்டு அவர்களது ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஆசைப்படுவதே துன்பம் தருகிறது.
எனவே எப்போதுமே நமக்கு மேல் உள்ளவர்களுடன் ஒப்பிடுவதை விட்டுவிட்டு நமக்கு கீழே இருப்பவரைக் கண்டு நிறைவு கொள்ள வேண்டும்.
அழகான ஆசை அனைத்தும் நல்லதே.
நம்மால் நம் தகுதிக்கும், உடலுக்கும், பொருளாதார சூழலுக்கும் ஏற்ப ஆசைப்படுவது நல்லது.
அளவிற்கு அதிகமான எண்ணற்ற ஆசைகள் நம் தகுதிக்கு மேற்பட்ட ஆசை அனைத்துமே நம் வாழ்க்கைக்கு தீங்கு விளைவிப்பவை.
இவை அனைத்தும் நம் அமைதியினை கெடுப்பவை.
எந்த ஒன்றின் மீது ஆசை வருகிறதோ? அந்த பொருள் இன்றி வாழ முடியாதா? என்று கேட்டுக் கொண்டால் அது பொருள் மீதான ஆசை போய்விடும்.
ஆசை தரும் தேவையில்லாத பொருள்களில் இருந்து எத்தனை தூரம் விலகுகிறோமோ? அவ்வளவு துன்பம் குறையும்.
ஆசை இல்லாத உயிர்கள் இல்லை.
அதிக ஆசை உள்ள உயிர்கள் நிம்மதியாக வாழ்வதும் இல்லை.
எனவே நமக்கு ஆசை இருக்க வேண்டும் .
அது பேராசையாக மாறிவிடக்கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருங்கள்.
அதுவே, வாழ்க்கையை சுகமாக்கி விடும்.