பிரிஞ்சி இலையின் மகத்துவம்
தலைமுடியின் ஆரோக்கியத்துக்கும், அழகுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
இதில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், இரும்புச்சத்து ஆகிய இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
செரிமானத்தை சீராக்கி செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
அதிலும் பிரிஞ்சி இலையை டீயில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் மலச்சிக்கல் , குடலியக்க பிரச்சனைகள் குணமாகும்.
டைப் 2 நீரழிவுக்கு நல்லது.
இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரித்து இதயத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவும்.
எனவே நீரழிவு நோய்கள் இதனை உணவில் சேர்த்து வருவது நல்லது.
தொடர்ந்து பிரிஞ்சு இலையை சாப்பிட்டு வந்தால் முடி கொட்டுவதும் நிற்கும்.
இலையை நீரில் நன்கு வேகவைத்து ஆறியதும் தலையை கழுவினால் முடி உதிர்வது நிற்கும்.
இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதை சருமத்தில் எரிச்சல் உள்ளவர்கள் கழுவினால் எரிச்சல் போகும்.
இலையில் உள்ள ஆன்ட்டி பாக்டீரியாக்கள் கிருமி தாக்கத்திலிருந்து காக்கும்.
பிரியாணி இலையை கொதிக்க வைத்து நீருடன் எலுமிச்சை சாறு சேர்த்து தலையில் தேய்த்து வந்தால் பிரச்சனை தீரும் .
சிறுநீரகப் பிரச்சனைகள், சிறுநீரக கற்களை போக்க பிரிஞ்சி இலை பெரிதும் உதவியாக இருக்கும்.
அதற்கு இலையை நீரில் போட்டு காய்ச்சி அதனை தினமும் ஒரு டம்ளர் குடித்து வர வேண்டும்.