தினசரி உணவில் எண்ணெய்

தினசரி உணவில் எண்ணெய்
 இந்திய உணவுகளில் சமையல் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது.

 நம் அன்றாட சமையலில் எண்ணெய் ஒரு அத்தியாவசிய உணவாகும்.

 எண்ணெயை பயன்படுத்தி உணவு பொருட்களை ஆழமாக வறுப்பது, வதக்குவது போன்ற எல்லா விஷயங்களையும் செய்ய முடியும்.

 பாெரிந்தது போக மிஞ்சி இருக்கும் எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதால் உடலில் ஆரோக்கிய கேடுகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.

 எண்ணையை அதன் அதிகபட்ச கொதி நிலைக்கு அதிகமாக சூடாக்கும்போது வேதியல் மூலக்கூறுகளின் கலவை மாறி கொழுப்பு அமிலங்களை கெட்ட கொழுப்புகளாக மாற்றுகிறது.

 இதை நமது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்க கூடியது.

 எண்ணெயை அதிகமாக சூடாக்குவது செல்களில் ஆக்சிஜனேற்ற சேதத்தை உண்டாக்குகிறது.

 ஆக்சிஜன் ஏற்ற அழுத்தம் என்பது ரத்தக்குழாய் தமனிகளை தடுத்து சருமத்தை சேதப்படுத்தும்.

 புற்று நோய்க்கு வழி வகுக்கும்.

 காய்ச்சிய எண்ணையை திரும்ப பயன்படுத்துவதற்கு முன்பு அதன் அதிகபட்ச கொதி நிலையை அறிந்து வைத்திருப்பது நல்லது.

 சூரியகாந்திய எண்ணெய்

 இயற்கையாகவே சூரியகாந்தி எண்ணெயில் நிறைய ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன.

 இது ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை தடுக்கிறது.

 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

 உடம்பில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது.

 சூரியகாந்தி எண்ணையின் அதிகபட்ச கொதிநிலை 400 டிகிரி ஃபாரன்ஹீட்.

 இது ஆழமாக பாெரிப்பதற்கு ஏற்றது.

 தேங்காய் எண்ணெய் 

தேங்காய் எண்ணெய் மூளை செயல்பாட்டிற்கு உதவுகிறது.

 வலி தாக்கங்களை குறைத்து நல்ல கொழுப்பு அதிகரிக்க செய்கிறது.

 தேங்காய் எண்ணெயில் அதிகபட்ச கொதிநிலை 350 டிகிரி ஃபாரின்ஹீட்.

 அதிக வெப்பநிலை சமையலுக்கு ஏற்றதல்ல.

 ஆலிவ் எண்ணெய்

இது எந்த வகையான சமையலுக்கும் உகந்த எண்ணெய் .

இதில் வைட்டமின் ஈ உள்ளது.

 இதன் அதிகபட்ச கொதிநிலை 320 டிகிரி ஃபாரின் ஹிட்.

 நடுத்தர வெப்பநிலை செயல்பாடுகளுக்கு சிறந்தது.

 சோயா பீன்ஸ் எண்ணெய்

இது உலகில் பரவலாக பயன்படுத்தப்படும் தாவர எண்ணையாகும்.

 அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் இதில் நிறைந்துள்ளன .

இதன் கொதிநிலை 350 டிகிரி பாரன்ஹீட்.

 ரைஸ் பிரான் எண்ணெய் 

இதில் பாலி அன்சேச்சுரேட்டேட் மற்றும் மோனோ சேச்சுரேட்டேட் அமிலங்கள் காணப்படுகின்றன.
 இது அதிகபட்ச கொதி நிலை 490 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை