நான் ஸ்டிக் தவாவை பயன்படுத்துவது எப்படி
நான் ஸ்டிக் தவாவை உபயோகிக்கும் முன் கண்டிப்பாக பாத்திரத்தை கழுவ வேண்டும் .
கழுவுவதற்கு சோப்புத்தூளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கிளீனிங் பவுடர் பயன்படுத்தக் கூடாது.
நான் ஸ்டிக் தவாவை பயன்படுத்தும் போது அதிகமான சூட்டில் வைக்காமல் குறைந்த மிதமான சூட்டில் வைத்து பராமரித்தாலே போதுமானது.
சமைக்கும் பொருட்கள் ஏதுமின்றி நான் ஸ்டிக் தவாவை தீயின் மேல் வைக்க கூடாது .
அப்படி அதிக நேரம் வைக்க நேர்ந்தால் அதன் மேல் பூசப்பட்ட கோட்டிங் பாலாகிவிடும்.
தவாவை கழுவி துடைக்கும் போது மென்மையான துணி அல்லது ஸ்பான்ச் போன்றவற்றால் துடைக்க வேண்டும்.
கூர்மையான கரண்டி மற்றும் கத்தியை பயன்படுத்தக் கூடாது.
மரத்திலான கரண்டி அல்லது பிளாஸ்டிக் கரண்டியை பயன்படுத்துதல் வேண்டும்.
மற்ற பாத்திரங்களோடு உரசல் ஏற்படாமல் அதுக்கென்று உள்ள ஆணியிலோ அல்லது தகுந்த இடங்களிலோ மாற்றி வைத்து எடுத்து பயன்படுத்த வேண்டும்.