ஜாதிக்காயின் பயன்கள்

ஜாதிக்காயின் பயன்கள் 

மலை பாங்கான குளிர்ச்சியான இடங்களில் வளரும் ஒருவகை மரத்தின் காய் பகுதி தான் ஜாதிக்காயாகும்.

 தமிழகத்தில் ஏற்காடு, குற்றாலம், கொல்லிமலை போன்ற குளிர்ச்சியான மலை பிரதேசங்களில் இது அதிகமாக விளைகிறது.

 சதைப்பற்றாக இருக்கும் ஜாதிக்காய் கனியின் மேல் தோலை அப்படியே துண்டு துண்டாக அறிந்து மாங்காய், எலுமிச்சம்பழம் போன்று ஒரு கை செய்து வைத்துக்கொண்டு பயன்படுத்திக்கொள்ளலாம்.

 சுவையாக இருப்பதோடு ஜாதிக்காயின் நன்மைகளை அடையலாம்.

 கனிக்கும் , விதைக்கும் இடையே விதையை சூழ்ந்திருக்கும் மெல்லிய தோல் போன்ற பகுதி தான் ஜாதி பத்திரி.

 இதில் விதையும், ஜாதி பத்திரி இதழும் தான் மனமும், மருத்துவ குணமும் கொண்டவை .

ஜாதிக்காய் அதிக காரமும், துவர்ப்பு தன்மையும் கொண்டது,

 மருத்துவ குணங்கள் கொண்ட அற்புதமான ஜாதிக்காய் தரும் பலன்கள் என்னவற்றவை அவை என்னவென்று பார்ப்போம.

 இனிப்பு சுவையுடன் கூடிய தனித்துவம் மனம் ஜாதிக்காயில் இருப்பதற்கு அதன் மைரிஸ்டிசின் என்னும் சத்து தான் காரணம் :

தோல் சுருக்கம் ஏற்படாமல் இளமையான தோலை முதுமையிலும் பெற்றிருக்க ஜாதிக்காயில் மைரிஸ்டிசின் சத்தை ஆன்டி - ஏஜிங் கிரிமகளில் சேர்க்கின்றார்கள்.

 மேலும் மைரிஸ்டிசின் வாசனை திரவியங்கள் முகப்பூச்சு, பற்பசை மற்றும் வாய் கொப்பளிக்கும் தைலங்களிலும் பயன்படுகிறது.

 ஜாதிக்காய் எண்ணெயில் அடங்கியுள்ள மைரிஸ்டின் பலவிதமான நோய்களை குணமாக்குகிறது.

 ஜாதிக்காயிலிருந்து பிரித்து எடுக்கப்படும் ஒலியோரேசின் என்னும் கொழுப்பு, வெண்ணை போன்றவை வாதம்  மற்றும் தசைப் பிடிப்பிற்கு மருந்தாகவும், பாக்டீரியா மற்றும் கரப்பான் கொல்லியாகவும் பயன்படுகிறது.

 ஜாதிக்காய் பொடியை சிறிது பாலில் கலந்து மூன்று வேளை சாப்பிட வயிற்றுப்போக்கு சரியாகும். உடல் சுறுசுறுப்பு அடையும்.

 ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து முகத்தில் பற்றுப்போட முகப்பரு, கரும்புள்ளிகள், தழும்புகள் நீங்கும்.

 பல்வலி உள்ள இடத்தில் இரண்டு சொட்டு ஜாதிக்காய் எண்ணெய் தடவினால் பல்வலி நீங்கும் .

ஜாதிக்காய் பொடி அரை ஸ்பூன் சூடான பாலில் கலந்து குடித்தால் தூக்கம் நன்றாக வரும்.

 ரத்தத்தில் கொழுப்பை குறைப்பதிலும் வெள்ளை அணுக்களில் ஏற்படும் ரத்தப் புற்று நோயை தடுப்பதிலும் கூட ஜாதிக்காய் செயலாற்றுகிறது .

ஒரு சிட்டிகை ஜாதிக்காய் தோலை பசும்பாலில் கலந்து இரவில் படுக்கும் போது சாப்பிட்டு வர மன அழுத்தத்தை போக்குகிறது.
 நரம்பு மண்டலங்களை தூண்டி சுறுசுறுப்பாக செயலாற்ற வைக்கிறது.

கருத்துரையிடுக

புதியது பழையவை