ரத்தத்தை சுத்தமாக்கும் புதினா
புதினா கீரையை துவையலாக அரைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ரத்தம் சுத்தம் ஆகுவதுடன் புதிய ரத்தம் உற்பத்தியாகும்.
எந்த காரணத்தில் ஆவது வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருந்தால் அந்த சமயம் புதினா கீரையை துவையலாக அரைத்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும் .
சிறு குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படும் போது புதினா கீரையை கசாயமாக தயாரித்து ஒரு சங்கு அளவு காலை மாலை இரண்டு வேளை கொடுத்து வந்தால் உடனே குணமாகும்.
புதினா கீரை இலைகளை மட்டும் ஆய்ந்து எடுத்து ஒரு கைப்பிடி அளவு வாணலியில் போட்டு வதக்கி அதில் ஒரு கப் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து பாதி அளவு தண்ணீர் சுண்டிய பிறகு அதை வடிகட்டி மேற் சொன்ன முறையில் கொடுத்து வந்தால் பரிபூரணமாக குணமாகும்.
புதினா கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து மூன்று மணி நேரம் கழித்து நீரை வடிகட்டி குடித்து வந்தால் வாந்தி, வாயு கோளாறு ,வயிற்றுப் பொருமல், வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் குணமாகும்.
புதினா கீரையை சூப்பாக தயாரித்து சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தமான நோய்கள் குணமாவதுடன் இதயம் வலுப்பெறும்.
புதினா கீரையை ஆய்ந்து வெயிலில் வைத்து நன்றாக காய வைத்து பொடி செய்து அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.
தரித்த பெண்களுக்கு தலைசுற்றல், சோம்பல், வாந்தி போன்றவை கருத்தரித்த இரண்டாவது மாதம் முதல் ஏற்படும். இதனை கட்டுப்படுத்த புதினா கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நோய்கள் குணமாகும்.