கை பைகள் பராமரிப்பு

கை பைகள் பராமரிப்பு

பெண்கள் கைப்பைகள் இல்லாமல் வெளியே செல்வதில்லை.

 இப்படிப்பட்ட கை பைய்களை பராமரிப்பதில் பலரும் அக்கறை செலுத்துவதில்லை.

 இவற்றை எப்படி பயன்படுத்துவது குறித்த சில ஆலோசனைகள்:

1. வாரம் ஒரு முறை ஈரத்துணியால் முழு பையையும் மெதுவாக துடைக்கலாம். தேய்க்க வேண்டாம். கண்டிப்பாக உலர வைக்க வேண்டும்.

2. ஒவ்வொரு பயன்பாட்டுக்குப் பிறகும் கை பைய்களை துணியால் துடைப்பது அதன் ஆயுளை அதிகரிக்கும்.

3. ஒவ்வொரு பயன்பாட்டுக்கு பின்னரும் கைப்பையில் வடிவம் மாறாமல் இருக்க காகிதம் அல்லது பழைய துணிகள் உள்ளே வைக்க வேண்டும்.

4. கைப்பையில் ஏதேனும் திரவ பொருட்கள் வைக்க வேண்டுமாயின் அவற்றை பாலித்தீன் பையில் சுற்றி வைக்க வேண்டும். இதனால் உட்புறங்களில் கரை ஏற்படாது.

5. தோல் கைப்பைகளை அதற்கென கிடைக்கும் லெதர் கிளீனர் கொண்டு சுத்தப்படுத்தவும்.
6. கைப்பைகளை நேராக சமதளத்தில் வைத்துக் கொண்டே ஜிப்பை திறந்து மூட வேண்டும் சாய்வாக வைத்துக்கொண்டோ, தொங்கவிட்டுக்கொண்டோ திறக்கக் கூடாது.

கருத்துரையிடுக

புதியது பழையவை