இளம் மனைவியாருக்கு சில ஆலோசனைகள்

இளம் மனைவியாருக்கு சில ஆலோசனைகள் 

திருமணம் ஆகி கணவர் வீட்டுக்கு செல்லும் பெண்களுக்கு சில ஆலோசனைகள் இதை கடைபிடித்தால் வாழ்க்கை இன்பமாகும் .

இந்த பார்டரை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்

மகனுக்கு திருமணம் ஆனதும் மாமியார் மருமகள் வந்துட்டா நான் ஓய்வெடுக்க போறேன்னு நெனச்சா ஆபத்து.

 அதேசமயம் அம்மாவிற்கு மட்டுமே சப்போர்ட் செய்து பேசக்கூடாது .

இரு பக்க நியாயத்தையும் பார்க்க வேண்டும்.

 அதனால் மருமகள் கணவரிடம் உன் எல்லையை தாண்டக்கூடாது நானும் தாண்ட மாட்டேன்னு நாசுக்காக கூறிவிடலாம்.

 ஆணியை பிடுங்க வேண்டாம்

மாமியார் வீட்டில் நல்ல பெயர் எடுக்க மருமகள் துடிப்பது சகஜம். 

ஆனால் ஒரு எச்சரிக்கை, நன்கு தெரிந்ததை செய்யுங்கள்.

தெரியாததை தெரியும் போல் காட்டிக் கொண்டு வேலையில் இறங்க வேண்டாம்.

 அது பெயரை கெடுத்து விடும்.

 உனக்கு வந்த ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? 

கணவர்கள் தங்களுடைய காரியம் என்றால் உடனே அதனை முதல் காரியமாக செய்து முடித்து விடுவர்.

 அதேசமயம் மனைவியை சார்ந்த வேலையை தள்ளிப் போடுவர்.

 இந்த சமயத்தில் அன்பை வார்த்தையில் தோய்த்து குரல் கொடுக்க தயங்காதீர்கள்.

 இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆகிட்டீங்களேடா

வாழ்க்கையில் எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்குவது என்பது இயலாத காரியம்.

 மாமியார் வீட்டில் உங்களை புகழ்வதற்காக எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தால் நல்ல பெயர் கிடைக்கும்.

 அதே சமயம் அனைத்தையும் உங்கள் தலையில் கட்டி விடுவார்கள்.

 பி கேர்ஃபுல் நான் என்னை சொன்னேன் 

எதிலும் கவனம் தேவை.

 குறிப்பாக மனைவி பேச்சிலும், செயலிலும் கவனம் வேண்டும்.

 தவறினால் கணவரிடம் இருந்தும் குடும்பத்தாரிடம் இருந்தும் கெட்ட பெயர் வரும்.

 ரிஸ்க் எடுக்கிறது எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி 

புத்திசாலித்தனம் என்பதே பயப்படாமல் எதிர்கொண்டு வரும் சங்கடங்களை சமாளித்து கணவரையும், தன்னையும் காத்துக் கொள்வதுதான் .

அந்த மனப் பக்குவத்தையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

 பிளான் பண்ணி தான் பண்ணனும்

திட்டமிட்டு செய்பவர்கள் வெற்றி மற்றும் பாராட்டை பெறுவார்கள்.

 கோபப்பட்டால் நஷ்டம் நமக்கும் தான்.

 கணவரிடம் நயமாக பேசினால் மசிந்து விடுவார்கள்.

கருத்துரையிடுக

புதியது பழையவை