வாங்க வீட்டை அலங்கரிக்கலாம்
வீடு அழகாக இருக்க வேண்டும் என்பதில் நமக்கு அவ்வளவு ஆர்வம் இருக்கிறது.
ஆனால் அதை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும்.
அதற்காக என்ன செய்ய வேண்டும்.
1. தரை விரிப்புகளை வாங்கும்போது சிறிய விரிப்புகளை தவிர்க்க வேண்டும். அறையின் நடுப்பகுதியில் பெரிய தரை விரிப்பை விரித்தால் தான் பார்க்க அழகாக இருக்கும்.
2. வீட்டிற்கு வண்ணம் அடிப்பதற்கு முன்பாக வீட்டிற்க்கான பர்னிச்சர்கள் மற்றும் அலங்கார பொருட்களை வாங்குவது நல்லது. பின் அந்த அலங்கார பொருட்களுக்கு பொருத்தமான வண்ணங்களை தேர்வு செய்ய எளிதாக இருக்கும்.
3. திரைசீலைகளுக்கு அடியில் இருந்து வெளிச்சம் வந்தால் அதைப் பார்க்க அழகாக இருக்காது .எப்போதும் தரை வரை தொடும் நீண்ட உயரமான திரைச் சீலைகளை தேர்ந்தெடுப்பது நல்லது. அது வீட்டின் உயரத்தை அதிகரித்து காட்டும் .
4.ஒரு சோபாவில் ஏராளமான தலையணைகள் இருக்கலாம். அதே நேரத்தில் அதில் உட்காருவதற்கு இடமும் இருக்கலாம். நீளமாக இருக்கும் சோபாவில் நான்கு பெரிய தலையணைகளை வைக்கக்கூடாது. உட்காருவதற்கு வசதியான இடம் இருக்கும் வகையில் தலையணைகள் மற்றும் மெத்தைகள் அமைக்க வேண்டும். கடைகளில் பெரிய மெத்தைகள் அல்லது பெரிய தலையணைகளை பார்க்கும்போது பார்க்க அழகாக தெரியும். ஆனால் அவற்றை நம் வீட்டில் உள்ள பர்னிச்சர்களில் வைத்தால் நாம் எதிர்பார்க்கும் அழகு கிடைக்காது.
5. பர்னிச்சர்களுக்கு சிறிய தலையணைகளையே தேர்வு செய்யலாம்..
6. சர விளக்குகளை மிக உயரத்தில் தொங்கவிடக்கூடாது. காரணம் உயரத்தில் தொங்கும்போது அதன் வெளிச்சம் வீட்டின் மேல் கூரையின் மீது மட்டுமே படும். சிலர் தங்களின் அறையினை ஒரு திமில் வடிவமைத்து இருப்பார்கள். அது நாளடைவில் செழிப்பு ஏற்படுத்தும்.
7. எளிதாக நீக்க முடியாத அச்சுக்கள் மற்றும் வரைபடங்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும். பர்னிச்சர்கள் புதிய நவீன பாணியில் இருக்கிறது என்பதற்காக அதை தேர்வு செய்யாமல் வசதியாகவும், பொருத்தமாகவும் இருக்கும்படி தேர்வு செய்யலாம்.
8. பலவகையான மின் விளக்குகளை தேர்வு செய்யாமல் ஒன்று அல்லது இரண்டு வகை மின் விளக்குகளை தேர்ந்தெடுத்து வீட்டின் பல்வேறு பகுதிகளில் பொருத்தலாம்.
மேற்கண்டவைகளை செய்து பாருங்கள் உங்கள் வீடு ஜொலிக்கும்.