சுகப்பிரசவம் வேண்டுமா?

சுகப்பிரசவம் வேண்டுமா?

எல்லோருக்கும் பிரசவம் என்பது ஒரே மாதிரி அமையாது. இதற்கு பலவிதமான காரணங்கள் இருந்தாலும் சுகமான நலமான பிரசவமாக மாறுவதற்கு வாய்ப்புகள் நம்மிடம் தான் உள்ளன.

 நிறை மாத கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு தயாராவது எப்படி? ஆரோக்கியமான பிரசவத்தை பெறுவது எப்படி ?என்பதை பற்றி பார்ப்போம்:

 பிரசவத்துக்கு தயாராகும் உங்கள் உடல் நிலையையும், மனநிலையையும் சரியாக இருத்தல் முக்கியம்.

 கர்ப்ப காலத்தில் மனக்கவலை இருத்தல் கூடாது.

 பிரசவத்தைப் பற்றிய பயமில்லாமல் நேர்மறை எண்ணத்துடன் அணுகினாலே பிரசவம் எளிதாக அமையும் .

நம்பிக்கையான மற்றும் சந்தோஷமான உறவுகளுடன் உரையாடலாம்.

 இறை வழிபாடு செய்யலாம்.

 இதுபோன்ற விஷயங்கள் உங்கள் மனதிற்கு புத்துணர்வு கொடுக்கும்.

 பக்தி பாடல்கள் அல்லது கதைகள் கேட்பது கூட நல்ல பலனை தரும்.

 வலி ஏற்பட்டதுமே உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும்.

 மருத்துவமனை உங்கள் இடத்திற்கு அருகில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் .

ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அதற்கு தகுந்த சிகிச்சை உடனடியாக மேற்கொள்ள எல்லா ஏற்பாட்டையும் தயாராக வைத்துக் கொள்வது அவசியம்.

 பிரசவ காலத்தில் கர்ப்பிணிகளை சிலர் எந்த வேலையும் செய்ய விடாமல் ஓய்விலேயே இருக்கச் செய்வார்கள்.

 அந்த தவறை செய்யாதீர்கள்.

 பிரசவம் சுகமாக நலமானதாக அமைய வேண்டும் என்றால் கர்ப்பிணிகளின் கை, கால் தொடை தசைகளும் நரம்புகளும் வலுவானதாக இருக்க வேண்டும் .

எனவே சின்ன சின்ன வீட்டு வேலைகளை செய்யுங்கள்.

 கட்டாயம் தினமும் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்.

 நிதானமான வேகத்தில் நடை பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் தசைகளும், நரம்புகளும் வலுவாக இருக்கும்.

 கால் வீக்கம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படாமல் தடுக்கும்.

கர்ப்பிணிகளுக்கு ஏழு முதல் எட்டு மணிநேர உறக்கம் அவசியம்.

 டாக்டர்கள் அறிவுறுத்தல் இருந்தால் மட்டும் பெட் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்.

 மற்றபடி உடற்பயிற்சி அவசியம்.

 உங்கள் உடல் ஒத்துழைக்கும் பட்சத்தில் யோகாவும் செய்யலாம்.

 மூச்சுப் பயிற்சி செய்வதும் மிகவும் சிறந்தது.

 பிரசவ காலத்தில் ஆக்டிவாக இருங்கள்.

 நிறைய தண்ணீர் குடியுங்கள் அது கருவில் உள்ள குழந்தைகளையும் உங்கள் அவர்களின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.
 இந்த விஷயங்களை எல்லாம் நீங்கள் கடைபிடித்தால் நிச்சயமாக உங்கள் பிரசவம் சுகப்பிரசவமாக அமையும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை