பால் + கலந்து = களிப்போம்
பால் அனைத்து வயதினரும் கட்டாயம் தினசரி உணவில் சேர்க்க வேண்டிய முக்கியமான உணவுப்பொருள்.
ஏனெனில் பாலில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்களான கால்சியம், புரோட்டின், கனிமச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள், பொட்டாசியம், பாஸ்பரஸ், ஐஓபி, வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி 12 போன்றவை அதிக அளவில் உள்ளன.
பாலை தினம் உட்கொண்டு வருவதால் பற்கள், எலும்புகள் நன்கு ஆரோக்கியமாக இருக்கும் .
அதுவும் வளரும் குழந்தைகள் பாலை குடித்து வந்தால் அவர்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
அதே போல் வயது அதிகரிக்கும் போது பாலை குடிப்பதால் அது முதுமை காலத்தில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை குறைத்து எலும்புகளை வலுவாக வைத்துக் கொள்ளும்.
இது தவிர பால் மூளையின் வளர்ச்சிக்கும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் உதவுகிறது .
ஆனால் பாலை வெறுமனே குடிக்காமல் பாலுடன் எந்த பொருட்களை கலந்து குடித்தால் இரு மடங்கு பலனை பெறலாம் என்பதை தெரிந்து கொள்வோம் .
மஞ்சள் தூள்
மருத்துவ குணம் வாய்ந்த மஞ்சள் தூளை பாலுடன் சேர்த்தால் பால் சுவையாக இருப்பதோடு உடலுக்கு ஏராளமான நன்மைகளும் கிடைக்கும்.
அதுவும் இரவு நேரத்தில் மஞ்சள் தூள் கலந்து பால் குடித்தால் நிம்மதியான தூக்கம் வரும் சளி இருமல் இருந்தாலும் சரியாகும்.
உலர் பழங்கள்
உலர் பழங்களை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் இரு மடங்கு நன்மை கிடைக்கும்.
பாதாம், முந்திரி, உலர் திராட்சை, வால்நட் போன்றவற்றை பாெடித்து பாலுடன் சேர்த்து இரவு தூங்கும் முன் குடித்து வந்தால் நல்ல தூக்கத்தை பெறுவதோடு உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து ஆரோக்கியம்.
பழங்கள்
இருக்கும் பாலுடன் பழங்களை சேர்த்து மில்க் சேர்க்காக அடித்து உண்டா சுவையாக இருப்பதோடு உடலுக்கு பல்வேறு நன்மைகளும் கிடைக்கும்.
முக்கியமாக வாழைப்பழம் கலந்த பாலானது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
தற்போது கடைகளில் ரோஸ், ஸ்ட்ராபெரி, பட்டர் ஸ்காட்ச் போன்ற பிளேவர்களில் பால் பவுடர்கள் விற்கப்படுகின்றன. இதை மிகவும் சுவையாக இருப்பதோடு இவற்றில் டயட்ரி நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை இருப்பதால் செரிமான மண்டலம் நோய் எதிர்ப்பும் மண்டலத்தின் செயல்பாடு மேம்படும்.