சட்னிக்கு வயசு என்ன?
சட்னி என்ற சொல் நம்முடையது அன்று. அது ஹிந்தி அல்லது உருது மூலம் கொண்டது நக்குதல் என்பது இதன் பொருள்.
இன்னமும் மூலத்தை தேடி போனால் அது அரேபியாவுக்கு செல்லக்கூடும்.
அப்படியானால் சட்னி நம்மிடம் இருக்கவில்லையா? ஏன் இல்லாமல்.... காலங்காலமாய் நம் முன்னோர்கள் அதை துவையல் என்று சொன்னார்கள்.
2000 வருடங்களுக்கு முன்பு சங்க இலக்கியங்களிலேயே துறக்கற்கள் உண்டு.
புலவு நாறும் துறுகல் என்பது வேட்டையாடி கொண்டு வந்த மாமிசங்களை சுத்தம் செய்யும் பாறை அது இல்லாமல் கீரைகள் இழைத்தலைகளை அரைத்து செய்யும் துவையலுக்கான கற்கள் உண்டு.
அதன் பெயரை நாம் அனைவரும் அறிவோம். அம்மி என்பார்கள்.
வட இந்தியாவில் சட்னி என்று சொல்வார்கள்.
ஊறுகாய் போல் மாத கணக்கில் வைத்து உண்ணும் ஒரு சைடு டிஷ் கூட
சற்று நீ என்றே சில வட மாநிலங்களில் சொல்கிறார்கள்.
ஆந்திராவில் ரொட்டி, பச்சடி என்று சொல்வதும், தெலுங்கானாவில் தொக்கு என்று சொல்வதும் ஒருவகை சட்னி தான் என்கிறார்கள்.
தொக்கு விஜயநகர காலத்தில் பலவிதமான அவதாரங்கள் எடுத்தது.
குப்தர் காலத்தில் இன்று உலாவும் பலவிதமான சட்னிகளின் பூர்வ வடிவம் உருவானதாம்.
நம்மை பொருத்தவரை தேங்காய் சட்னி கொஞ்சம் பழையது. அனேகமாய் ஒரு ஆயிரம் வருடங்கள் இருக்கக்கூடும்.
அப்படியானால் அதற்கு முன்பு இல்லை என்று தான் தோன்றுகிறது.
சரி இட்லி இல்லாத காலத்தில் சட்னிக்கு மட்டும் என்ன வேலை.
கார சட்னி அல்லது மிளகாய் சட்னி மிகப் பிற்பாடு ஆந்திரா காரர்களால் உருவாக்கப்பட்டது.
தஞ்சாவூர் சரபோஜிகளால் இங்கு வந்திருக்க வேண்டும்.
அதில் புளியை சேர்த்தது தான் நம்மவர்கள் கைவண்ணம்.
கிட்டதட்ட போன நூற்றாண்டில் தான் புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, தக்காளி சட்னி என விதவிதமான சட்னிகளை உருவாக்கி இட்லிக்கும், தோசைக்கும் கட்டி வைத்தோம்.
நாம் காலக்கொடுமை என்னவென்றால் இக்கால இளசுகள் எதையும் பேர் சொல்வதில்லை.
அனைத்துக்கும் புது பெயரை கொடுத்து விட்டார்கள் அது மட்டும் தான் இந்த காலத்தின் பங்களிப்பு.