வாழ்க்கை பயணத்தின் 10 விதிகள்
1. அம்மாவை ஞாபகப்படுத்தும் படி சிலர் சமைக்கலாம். ஆனால் அம்மாவின் சமையலை மறக்கச் செய்யும் சுவை உலகில் எந்த உணவிற்கும் கிடையாது.
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஆடம்பர அறையில் கூட அம்மாவின் மடியில் படுத்து தூங்கிய சுகம் கிடைக்காது.
இந்த உலகில் நீங்கள் எந்த வேலை செய்தாலும் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளுக்கு அது ஈடாகாது.
2. முதன்முதலாக வேலைக்கு போய் சம்பாதித்த போது கிடைத்த மகிழ்ச்சியை அதன் பின் கிடைக்கும் எந்த உயர்வும் கொடுத்து விடாதே.
3. குழந்தைகளுக்கு பணக்காரர்களாக வாழச் சொல்லிக் கொடுக்காதீர்கள்.
மகிழ்ச்சியாக வாழ சொல்லிக் கொடுங்கள்.
வாழ்க்கையில் விலை கொடுத்து வாங்க முடியாத விஷயங்களும் உண்டு என்பதை அப்போதுதான் அவர்கள் உணர்வார்கள் .
4. மனிதர்களாக வாழ்வதற்கும் மனிதாவிமானத்துடன் வாழ்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இதை உணர்ந்து வாழுங்கள்.
5. வாழ்க்கையில் பெரிய விஷயங்களை அடைய நினைத்து நம்மிடம் ஏற்கனவே இருக்கும் சின்ன சின்ன விஷயங்களை மறந்து விடுகிறோம் .
வாழ்க்கை குறுகியது. எல்லாவற்றிற்காகவும்,
6. நன்றியுடன் இருங்கள். பிறக்கும்போது நீங்கள் நேசிக்கப்படுவீர்கள். மறையும்போது உங்களை அன்புடன் பலரும் நினைப்பார்கள்.
இடையில் அன்பை நீங்கிள்தான் முயற்சி செய்து சம்பாதிக்க வேண்டும்.
7. உங்களை உண்மையாக நேசிப்பவர்கள் ஒருபோதும் உங்களை விட்டு பிரிந்து செல்ல மாட்டார்கள்.
பிரிவதற்கு 100 காரணங்கள் இருந்தாலும் இணைந்து இருப்பதற்கு ஒரே ஒரு காரணத்தை யாவது அவர்கள் தேடி கண்டுபிடிப்பார்கள்.
8. சூரிய வெளிச்சம், ஓய்வு, உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவு, தன்னம்பிக்கை ஆகிய எவையே உலகின் மிகச்சிறந்த மருத்துவர்கள் .
வாழ்வின் எல்லா காலங்களிலும் இதை மறக்காதீர்கள் .
9. நிலவை பார்த்தால் படைப்பின் அழகு புரியும். சூரியனைப் பார்த்தால் படைப்பின் வலிமை புரியும். கண்ணாடியில் உங்களைப் பார்த்தால் படைப்பின் உன்னதம் புரியும். இந்த உலகில் உன்னதமான படைப்பு நீங்கள் தான். எனவே உங்கள் மீதான நம்பிக்கையை எப்போதும் விலக்காதீர்கள்.
10. நாம் இந்த பூமிக்கு சுற்றுலா வந்திருக்கிறோம். நம் பயணம் பாதை என எல்லாமே ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு இருக்கின்றன. நமக்கான எல்லாமே அந்த காலத்தில் கிடைக்கும் என நம்புங்கள். வாழ்க்கை பயணத்தை ரசித்து செய்யுங்கள்.