பாக்கெட் சுண்ணாம்பினால் ஏற்படும் பார்வை பாதிப்பு
வெற்றிலை போடும் பழக்கம் பெரும்பாலும் அனைவரிடமும் இன்றளவும் இருந்து வருகிறது.
உலகிலேயே வெற்றிலை போடும் பழக்கம் இந்தியாவில் தான் அதிகமாக காணப்படுகிறது.
வெற்றிலை போடுவதால் பற்கள் பாதிப்படைந்து வாய் புற்றுநோய் ஏற்படுகிறது என்பதை சிலர் அறிந்திருக்கலாம்.
ஆனால் வெற்றிலைக்கு பயன்படும் சுண்ணாம்பின்னால் கண்கள் பாதிப்படையும் என்பதை வெகு சிலரே அறிந்திருப்பார்கள்.
பொதுவாகவே சுப நிகழ்ச்சிகள் எதுவும் வெற்றியிலையின்றி நடைபெறாது.
தற்போது சுண்ணாம்பு வெள்ளை நிறத்தில் மட்டுமின்றி வண்ணங்களிலும் வெளி வருகிறது.
இது குழந்தைகளின் கண்களையும் கவரும் வண்ணம் இருப்பதால் அவர்களும் சுண்ணாம்பை எடுத்து பயன்படுத்துகின்றனர்.
பாக்கெட்டுகளில் இருக்கும் சுண்ணாம்பை எடுத்து பயன்படுத்தும் போது அது கண்களில் தெரித்தால் கருவிழியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
பொதுவாக குழந்தைகளே சுண்ணாம்பு கண்ணில் படுவதால் அதிக பாதிப்பை எதிர்கொள்கின்றார்கள்.
சுண்ணாம்பு கண்ணீல் பட்டால் தண்ணீரால் குறைந்த பட்சம் அரை மணி நேரம் கண்களை கழுவ வேண்டும்.
நாட்டு வைத்தியம் போன்றவற்றை கடைபிடிக்காமல் அருகில் இருக்கும் கண் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.
இதனால் கண்களில் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
வெற்றிலை போடும் பழக்கம் இருப்பவர்கள் சுண்ணாம்பு குழந்தைகள் பார்க்காத இடத்திலும், அவர்களுக்கு எட்டாத இடத்திலும் வைக்க வேண்டும்.