சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு முறை
சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
சர்க்கரை, குல்கோஸ், வெல்லம், தேன், இனிப்பு பண்டங்கள், அல்வா,பர்பி, ஐஸ்கிரீம், ஜாம், ஜல்லி கேக், கல்கண்டு, கொட்டைப்பருப்பு, உலர்ந்த பழங்கள், எண்ணெயில் பொரித்தவை, வெண்ணெய், நெய், பாலாடை கட்டி, கிழங்கு வகைகள், ஹார்லிக்ஸ், போன் விட்டா, தேங்காய் எண்ணெய் சாக்லேட், வனஸ்பதி, டால்டா, புகையிலை, மதுபானங்கள், துரித உணவுகள், பீசா, பர்கர்.
சர்க்கரை நோயாளிகள் சேர்த்துக் கொள்ளக் கூடிய உணவுகள்
எலுமிச்சை, வெண்ணெய் எடுத்த மோர், தக்காளி ஜூஸ், வெஜிடபிள் சாலட், மிளகு, கடுகு, மல்லி, பூண்டரசம், வடிகட்டிய காய்கறி சூப், வெந்தயம், இளநீர், காய்கறிகள், நார்ச்சத்து மிக்க உணவுகள், கேழ்வரகு, கான்ஃப்ளக்ஸ், சோளப்பொறி, மக்காச்சோளம், சாமை பயிர் வகைகள், பச்சை காய்கறிகள், முட்டைக்கோஸ், முருங்கைக்காய், பாகற்காய், சுண்டைக்காய், வாழைத்தண்டு, கீரை வகைகள், கொய்யாப்பழம், மாதுளை, பேரிக்காய்.