மறதி நோயை வெல்ல
மூளை என்ற உறுப்பு இல்லை எனில் மனிதர்கள் முடங்கி விடுவார்கள் .
அபார திறமை படைத்தது மூளை.
வயதாக வயதாக மறதியும் ஒன்றாக ஆகிவிடும்.
தற்போது மறதி நோய் பரவலாக உள்ளது.
மூளை நலமாக இருக்க செய்ய வேண்டியவை என்னென்ன ஒமேகாசத்துக்கள் அடங்கிய மீன் வகைகளை சாப்பிடுவது மூளையின் செயல்பாடுகளுக்கு மிக அவசியமாகும்.
பொதுவாக கடல் உணவுகளானது கொழுப்பு குறைந்ததோடு வலிமையானது கூட.
வைட்டமின் ஈ அதிகம் உள்ள பருப்புகள், விதைகள் மற்றும் வால்நட், பாதாம், முந்திரி, சூரியகாந்தி எல், விதைகள் ஆகிய தினமும் தேவையான அளவு சாப்பிடலாம்.
முக்கியமாக முந்திரி ஒரு நாளைக்கு ஐந்து என குறைவாக சாப்பிட வேண்டும்.
கொழுப்பை தவிர்க்க வேர்க்கடலையை வேக வைத்து சாப்பிடுவது நல்லது.
கோதுமை, கருப்பு அரிசி ஆகிய இதய நோய்க்கு நல்லது.
இதயம் சுறுசுறுப்பாக இயங்குவதால் ரத்தம் சீராக பாயும்.
அது மூளைக்கு அவசியம்.
மாதுளை பழங்களும் அப்படியே சாப்பிடலாம் அல்லது பழச் சாராகவும் உட்கொள்ளலாம். பழ சாற்றில் பால், சர்க்கரை கலக்காமல் சாப்பிடுவது நல்லது.
பாதிப்பு அடைந்த நரம்பு மண்டலங்களை வலுப்படுத்தும் காய்கறிகளில் பீன்ஸ் மிகவும் நல்லது.
பீன்ஸ் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
வெண்டைக்காய், முருங்கை, காலிபிளவர் என பல சத்துக்கள் உள்ளன.
தேயிலைகளால் நன்றாக பக்குவப்படுத்திய டீ மிக நல்லது.
நன்றாக தலை வலிக்கும்போது மாத்திரை எல்லாம் உட்கொள்ளாமல் ஒரு கருப்பு தேநீர், லேசாக எலுமிச்சை துளி கலந்து நாட்டு சர்க்கரையோடு பருகினால் சில நிமிடங்களில் கடுமையான தலைவலி போய்விடும்.
ஆப்பிள் சாப்பிட்டால் கூட தலைவலி குணமாகும்.
காபி கூட நல்லது தான்.
வாதம், பித்தம், கபம் ஆகிய வாயு சூடு குளிர்ச்சி ஆகிய மூன்றும் சமமாக இருந்தால் மருந்துக்கு வேலை இல்லை.
ஆரோக்கியமாகவே பல்லாண்டு வாழலாம்.
கருப்பு சாக்லேட் நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டது.
என்டோ பிரின்ஸ் எனப்படும் சாந்தத்தை மூளைக்கு தர வல்லது.
சோயா பீன்ஸ், பூசணி விதைகள், விதை எடுக்கப்பட்ட தக்காளி, முட்டை ஆகியன சாப்பிடுவது நன்மை தரும்.
கொழுப்பு பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சள் தவிர்த்து வெண்கரும் முட்டை ஒரு நாளைக்கு இரண்டு கூட சாப்பிடலாம்.
எண்ணெய் குறைவாக ஊற்றிக் கொள்ளுங்கள்.
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, வெண் சுத்திகரிக்கப்பட்ட உப்பு ஆகியவற்றை தவிர்த்து நாட்டுச்சர்க்கரை, நாட்டு உப்பு அல்லது இந்து உப்புகளை உபயோகிக்க வேண்டும்.
மைதா உணவுகளை தவிர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி ஆனது மூளை திறனுக்கு மிக முக்கியம்.
ஒரு நாளைக்கு குறைந்தது பத்து நிமிடமாவது நல்ல உடற்பயிற்சிகளில் சிறப்பானவற்றை செய்ய வேண்டும்.