உப்பு நீரை போக்கும் களி உருண்டைகள்

உப்பு நீரை போக்கும் களி உருண்டைகள் 


ஆழ்துளை கிணறு போடும்போது இடையிடையே உப்பு நீரும் வரும்.

 அதாவது நூறு அடியில் வருவது உப்பு நீராக இருக்கலாம் .

அதே நேரத்தில் 750 அடியில் நல்ல நீரூற்று இருக்கலாம் .

அப்படி இருக்கும்போது நல்ல நீருடன் உப்பு நீரும் கலக்கும் ஆழ்துளை கிணறில் பொதுவாக ஏற்படும் சிக்கல் இது .

இந்த சிக்கலுக்கு தான் எளிய கிராமத்து தொழில்நுட்பம் களி உருண்டைகள் நீண்ட காலமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

 வேறொனறுமில்லை களிமண் உருண்டைகள் தான் இவை.

 குளத்திலிருந்து எடுக்கப்படும் கெட்டி களிமண்ணை எலுமிச்சை அளவுக்கு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி காய வைக்கிறார்கள்.

 போர் போடும் போது பக்கமாகவே உப்புநீர் வருமானால் குழாயை எடுத்துவிட்டு இந்த களி உருண்டைகளை மூட்டை கணக்கில் கொட்டி விடுகின்றனர்.

 ஓரிரு நாட்களில் களிமண் அந்த உப்பு நீரூற்றை ஒரு கான்கிரட் தளம் போல கெட்டியாக அடைத்து விடுகிறது.

 பிறகு மீண்டும் போர் போடும் போது களிமண் பகுதியை கடந்து கீழே சென்று நல்ல நீரை எடுக்கலாம்.

 இடையில் ஓடும் உப்பு நீரூற்று கலக்காது .

இப்படியான அற்புத தொழில்நுட்பத்தில் களி உருண்டைகள் தயாரிப்பதை ஒரு தொழிலாகவே பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர் நாயக்கர் பட்டி மக்கள் .

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சாலையில் இருக்கிறது இந்த ஊர்.

 100 குடும்பங்களைக் கொண்ட இந்த ஊரில் பெரும்பாலானவர்கள் களி உருண்டை தயாரிப்பவர்கள் தான் .

மழை பெய்யும் நாட்களைத் தவிர்த்து அனைத்து நாட்களும் களியுருண்டைகளை உருட்டி காய வைக்கின்றனர்.

 ஒரு மூட்டையின் விலை ரூபாய் 30.

 அருகில் உள்ள குளத்திலிருந்து களிமண் எடுத்துக் கொள்கின்றனர்.

 எடுத்து வரும் மாட்டு வண்டி செலவு தான் .

அதை தாண்டி உழைப்பு மட்டுமே .

பல ஆண்டுகளாக கழிவு உருண்டை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் அந்த பகுதி மக்கள் கூறுவது நாங்கள் நாயக்கர் பட்டி கிராமமே கழிவு உருண்டை தயாரிப்பார்கள் தான் .

கடற்கரை பகுதியில் இருந்து லாரியில் வந்து நூற்றுக்கணக்கான மூட்டைகள் வாங்கிச் செல்கிறார்கள் .

குறிப்பாக காரைக்கால் பகுதியினர் அதிகம் வருகின்றனர்.

 கடற்கரை ஒட்டிய பகுதியில் சில அடி ஆழத்திலேயே உப்பு நீர் வந்துவிடும். அதை அடைப்பதற்கு இந்த களி உருண்டைகள் தான் வேறு வழியில்லை.

 குடும்பமாகவே வேலை செய்கிறோம்.

 எங்கள் வாரிசுகள் இப்போது பள்ளி கல்லூரிகளுக்கு படிக்கச் செல்கின்றனர் .
எளிய தொழில்நுட்பம் என்பதால் பெரிய வருமானம் எதிர்பார்க்க முடிவதில்லை என்கின்றனர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை