மழைக்காலத்தில் பட்டுப் புடவை பராமரிப்பு

மழைக்காலத்தில் பட்டுப் புடவை பராமரிப்பு 
மழை மற்றும் குளிர்காலத்தில் எல்லா இடங்களும் ஈரப்பதமாகவே இருக்கும்.

 இதனால் எளிதில் பூஞ்சைகள் மற்றும் பாசிகள் படர்ந்து விடும்.

 இது துணிகள் மற்றும் மர ஜாமான்களையும் விட்டு வைப்பதில்லை.

 குறிப்பாக பருத்தி மற்றும் பட்டு துணிகள் இவற்றால் அதிகமாக பாதிக்கப்படும்.

 பெண்களின் நேசத்திற்குரிய பட்டுப் புடவைகளை இதிலிருந்து எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்:

 பிளாஸ்டிக் கவர்களை தவிர்க்கவும்

பலரும் பட்டுப் புடவைகளை பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி பாதுகாப்பார்கள்.

 பிளாஸ்டிக் கவர்கள் ஈரப்பதத்தை ஈர்க்கும்.

 அதற்குள் வைக்கும் துணிகள் அந்த ஈரத்தை உறிஞ்சி கொள்ளும்.

 அது மட்டும் இல்லாமல் காற்றில் உள்ள ஈரப்பதம் ஜருகையை ஆக்சிஜன் ஏற்றம் செய்து கருக்கச் செய்யும்.

 எனவே பட்டுப் புடவை போன்ற ஜரிகை கற்கள் நிறைந்த ஆடைகளை மென்மையான பருத்தித் துணியில் சுற்றி வைப்பதே நல்லது.

 புரோட்டின் ஷாம்பு அல்லது ஒயிட் வினிகர்

மழைக்காலத்தில் விசேஷங்களுக்கு பட்டுப் புடவை உடுத்திச் சென்றாள் வீட்டுக்கு வந்ததும் அவற்றை உடனடியாக குளிர்ந்த நீரில் துவைப்பது சிறந்தது.

 ஒரு பக்கெட்டில் முக்கால் பங்கு தண்ணீர் நிரப்பி அதில் ஒரு டேபிள் ஸ்பூன் ஒயிட் வினிகர் அல்லது புரோட்டின் ஷாம்புவை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும் .

இதில் பட்டுப் புடவையை உட்புறமாக திருப்பி மூழ்க வைக்க வேண்டும்.

 மூன்று முதல் ஐந்து நிமிடங்களை வரை மட்டுமே புடவை தண்ணீரில் இருக்க வேண்டும்.

 பின்னர் அதை மெதுவாக வெளியே எடுத்து மற்றொரு பக்கெட்டில் குளிர்ந்த நீரை நிரப்பி அதில் நன்றாக அலசி எடுக்க வேண்டும்.

 புடவையை முறுக்கி பிழியாமல் தண்ணீரை உதறி நிழலில் உலர்த்த வேண்டும் .

பட்டுப் புடவையை உலர்த்துவதற்காக டிரையர் பயன்படுத்த வேண்டாம்

ட்ரையரில் உள்ள வெப்பம் புடவையை சேதப்படுத்துவதோடு அதன் நிறத்தையும் மங்கச் செய்யும்.

 ஹேங்கரை பயன்படுத்துங்கள்

பட்டுப் புடவையை மடித்து வைப்பதை விட ஹேங்கரில் மாட்டுவது சிறந்தது.

 மெட்டல் ஹேங்கரில் உள்ள உலோக கலவை துணியுடன் வினைபுரிந்து சேலையை நிரந்தரமாக சேதப்படுத்தும்.

 எனவே மரத்தினால் ஆன ஆங்கரை உபயோகங்கள்.

 புடவையை மட்டும் இன்றி பிளவுஸ்சுகளையும் ஹேங்கரில் மாட்டி வைப்பது அவசியம்.

 சிலிகா ஜெல் பயன்படுத்தலாம்

ஷூ அல்லது எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கும் போது அதனுடன் சிலிக்க ஜெல் பாக்கெட்டுகள் கிடைக்கும்.

 அவற்றை தூக்கி எறிவதற்கு பதில் புடவைகள் வைக்கும் அலமாரியில் வைக்கலாம்.
 அவை அலமாரியில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை.

கருத்துரையிடுக

புதியது பழையவை