பணிபுரியும் தாயார் தாய்பால் புகட்டுவது எப்படி?

பணி புரியும் பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்ட
பணியில் பெண்கள் மகப்பேறு அடைந்து குழந்தை பெற்றவுடன் தாய்ப்பால் புகட்டுவது ஒரு சவாலாக இருக்கிறது .

இவர்கள் தாய்ப்பால் புகட்ட சில வழிமுறைகளை காண்போம்:

 குழந்தைகள் பிறந்த ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் தான் சத்தான உணவு.

 நோய் எதிர்ப்பு சக்தியும் மிகுந்தது.

 தாய்ப்பால் கொடுப்பது ஒரு பாரம்பரிய நடைமுறை ஆனால் இன்றைய சூழலில் பணிபுரியும் பெண்களால் 100% தாய்ப்பாலை புகட்ட முடிவதில்லை.

63% குழந்தைகளுக்கு மட்டுமே முழுமையாக தாய்ப்பால் கிடைக்க நேரிடுகிறது.

 பணி புரியும் இடங்களில் ஆறு மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டாலும் அது அரசு நிறுவனங்களுக்கு மட்டும்தான்.

 தனியா நிறுவனங்களில் பணிபுரிவோரின் நிலை கடினம்தான்.

 இதற்காக சில வழிமுறைகளை கையாளலாம்:

1.  பெண்கள் தாய்ப்பாலை தங்களது கைகளில் வெளியேற்றி வீட்டில் சேமித்து வைக்கலாம்.

 இல்லத்தில் இருக்கும் பராமரிப்பாளர் குழந்தைக்கு உணவு அளிக்கலாம்.

 தாய்ப்பால் வெளியேற்ற சாதனங்களை பயன்படுத்துவது தவிர்ப்பது நல்லது.

வெளிப்படுத்தப்பட்ட தாய்ப்பாலை அரை வெப்ப நிலையில் சுமார் 8 மணி நேரம் வரை கொள்கலனில் சேமிக்கலாம் .

உறைப்பனியில் 24 மணி நேரமும், ஒரு வாரத்துக்கு மேலாக உறைவிப்பானிலும், ஒரு மாதத்திற்கு மேலாக ஆழமான உறைவிப்பானிலும் சேமித்து வைக்கலாம்.

2.  தாய் தனது அலுவலகத்தில் அனுமதி பெற்று குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டலாம்.

 ஒன்று அவள் வேலை செய்யும் இடத்துக்கு அருகில் வீட்டை மாற்றலாம்.

 குழந்தையை வேலை செய்யும் பகுதிக்கு அழைத்து வர யாராவது இருக்க வேண்டும்.

3. பணி புரியும் இடத்தில் குழந்தை காப்பக வசதி இருந்தால் பெண்கள் வேலை இடைவெளியின் போது அல்லது குழந்தை அழும்போது சென்று தாய்ப்பால் புகட்டலாம்.
4. அரசு துறைகளில் மட்டுமின்றி அனைத்து தனியார் நிறுவனங்களிலும் ஆறு மாதங்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவது தொடர்பான சட்டம் நடைமுறைக்கு வர வேண்டும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை