விரல் நகங்களை அழகுபடுத்த

விரல் நகங்களை அழகுபடுத்த 
நகம் கருமையுடன் சொத்தையாக இருந்தால் துத்தி இலையை சாம்பிராணியுடன் அரைத்து பற்று போட்டு வந்தால் விரைவில் சொத்தை மறையும்.

 நகங்களை சுற்றி தடித்து வலி இருந்தால் வெதுவெதுப்பான நீரில் டெட்டால், பெப்பெர்மிட் ஆயில் சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால் வலி நீங்கும்.நகம் சுத்தமாகவும்.

 ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி விரல்களின் மீது தேய்த்து ஊற வைத்தால் நகங்கள் உடையாமல் இருக்கும்.

 வெற்றிலையில் சிறிதளவு சுண்ணாம்பு கலந்து அரைத்து நகத்தில் வைத்து கட்டினால் நகத்தை சுற்றி வளரும் நகச்சுத்தி குணமாகும்.

 முருங்கைக்கீரை, பப்பாளி, மாம்பழம், பேரிச்சம்பழம் போன்ற உணவுகள் நகத்தை பாதுகாக்க உதவும்.
 வெள்ளை ஜெலட்டின் (கால்சியம் நிறைந்தது) இரண்டு தேக்கரண்டி எடுத்து, நான்கு தேக்கரண்டி சூடான நீரில் கரைத்து விரல்களின் மீது பூசி தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் நகங்கள் உடையாமல் வலிமை கொண்டதாக மாறும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை