படிக்கட்டுகளை பயன்படுத்துவோம்
தினமும் ஜாக்கிங், வாக்கிங், சைக்கிளிங் பயிற்சி செய்வதினால் கிடைக்கும் நன்மைகளைப் போலவே படிகளில் ஏறி இறங்குவதால் பல நன்மைகள் கிடைப்பதோடு உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
எடை குறைய
உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் படிக்கட்டுகளில் நடை பயிற்சி தொடங்கினால் போதும்.
அவ்வளவு பிரதிபலன் கிடைக்கும்.
காரணம் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதால் உடலின் கலோரிகள் அதிகமாக எரிக்கப்படுகின்றன.
வேகமாக உடல் எடையை குறைக்க தினமும் 10 முதல் 12 முறை படிகளில் ஏறி இறங்குவது நல்லது.
தசைகளுக்கு
ஜாக்கிங் செய்வதன் மூலம் தசைகள் வலுப்படுத்தப்படுகின்றன.
அதேபோன்று படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் போதும் கால்கள் மிகவும் அழுத்தமாக உணர்கிறது.
நடை பயிற்சியில் கிடைக்கும் பெரும் பலன்களை படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதன் மூலமும் பெறலாம்.
குறிப்பாக கால்களில் உள்ள பெரும்பான்மை கொழுப்புகள் படிக்கட்டில் ஏறி இறங்குவதால் குறைக்கப்படுகிறது.
மன ஆரோக்கியம் மேம்படும்
மன அழுத்தத்தில் இருப்பதாக உணரும் போதெல்லாம் படிக்கட்டுகளில் அரை மணி நேரம் ஏறி இறங்க தொடங்குங்கள்.
இது மனதிடத்தை அதிகரிக்கும்.
ஆற்றலை வழங்கும்
படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் போது உடல் ரத்தத்தை வேகமாக உந்துகிறது.
மேலும் இதையே மனதை அழுத்தமில்லாமல் பாதுகாக்க உதவுகிறது.
சகிப்புத்தன்மை
படிக்கட்டுகளில் ஏறி இறங்கும்போது சகிப்புத்தன்மை வலுவாக இருக்கும்.
ஆரம்பத்தில் மூன்று முதல் நான்கு முறை படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதால் படிப்படியாக சகிப்புத்தன்மை அதிகரிக்கும்.
மேலும் படிக்கட்டுகளில் ஏறி இறங்கும்போது முதுகு மற்றும் கழுத்து நேராக்கப்படுகிறது.
எனவே படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் போது உடலை வளைத்து நடக்கக்கூடாது.
இதனால் முதுகு மற்றும் கழுத்து இரண்டிலும் வலி ஏற்படும்.