கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தேவையான சத்துக்கள்
மாதவிடாய் ஆரம்பம் முதல் மகப்பேறு இறுதி வரை உள்ள நோய்க்குறிகள் பெண்களின் ஆரோக்கியத்துக்கு அடுத்த சவால் மிகுந்த காலமாகும்.
இதனால் அவர்களுக்கு பல்வேறு உடலியல் மற்றும் மனவியல் மாறுபாடுகள் ஏற்படுகிறது.
அவை அனைத்தையும் கையாண்டு ஆரோக்கியத்தை நிலை நாட்ட சத்தான உணவு அவசியமாகின்றது.
முக்கியமாக கர்ப்ப காலத்தில் வலிமையான, ஆரோக்கியமான அடுத்த சந்ததியை உருவாக்குவதற்கு சத்துகள் மிக மிக அவசியம் .
புரதச்சத்துக்கள் உடலின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான ஒன்று .
மகப்பேறு காலத்தில் பெண்கள் புரதச்சத்தினை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதுவே உடல் உறுப்புகள் வளர்ச்சியை அதிகரிக்கும் .
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கிட்டத்தட்ட பத்து கிலோ வரை எடை கூடும்.
அதற்கு புரதம் சிறந்த உணவு.
சைவப் பிரியர்களுக்கு பட்டாணி வகைகள், முளைகட்டிய தானியங்கள், பயறு வகைகள் இவற்றிலும் அசைவ பிரியர்களுக்கு மீன், முட்டை கரு, வகைகள் இவற்றிலும் அதிக அளவு புரதம் உள்ளது.
உளுந்து மற்றும் பாசிப்பயிரில் அதிக புரதம் உள்ளது.
ஆதலால் மாதவிடாய் ஆரம்பம் முதல் பெண்கள் தோலுடன் உள்ள கருப்பு உளுந்தை வடையாகவோ அல்லது பனைவெல்லம் சேர்த்த கஞ்சியாகவோ எடுத்துக் கொள்ளலாம்.
உளுந்து, பெண்களுக்கு இடுப்புக்கு அதிக வலிமை தரும்.
சர்க்கரை சத்து எனப்படும் காபோ வைதரேற்றுகள் உடலுக்கு முதன்மை ஆற்றலை அளிக்கும் தன்மை உடையன.
மாவு பொருள்கள் எல்லாவற்றிலும் இருப்பது இந்த சர்க்கரை சத்துக்கள் தான் .
சர்க்கரை சத்துக்கள் அரிசி வகைகளிலும், பழங்களிலும் அதிகம். ஆனால் பழங்களில் சர்க்கரை சத்துக்களுடன் எண்ணற்ற தாது உப்புக்களும், வைட்டமின்களும் ,ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த இயற்கை நிறமிகளும் அதிகம் உள்ளது.
இயற்கை நிரம்பிகள் பழங்களில் அதிகம் கிடைக்கின்றது .
நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பில் கரையும் வேதி மூலக்கூறுகள், கொழுப்பு சத்துள்ள உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டால் மட்டுமே உடல் வலுப் பெற முடியும்.
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் கர்ப்பிணி பெண்களுக்கு நல்ல பலத்தை தரும்.
பாலில் புரதச்சத்தும் ,கொழுப்புச் சத்தும் உள்ளது குறிப்பிடத்தக்கது.