கர்ப்ப காலத்தில் ஏற்படும் தழும்புகள் மறைய

கர்ப்ப காலத்தில் ஏற்படும் தழும்புகள் மறைய
கர்ப்ப காலத்தில் வயிற்றுப் பகுதி விரிவடைவதால் பிரசவத்திற்கு பிறகு ஏற்படக்கூடிய தழும்புகளைப் போக்க ஏதேனும் வழிகள் உண்டா? அதை தவிர்க்கும் முன்கூட்டியே ஏதேனும் உபயோகிக்கலாமா?

 கர்ப்பமான முதல் மாதத்தில் இருந்தே இதற்கான அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

 அதற்கு தரமான மொய்ஸ்சரை வயிற்றை சுற்றி மென்மையாக தடவி வரலாம்.

 கண்ட கண்ட எண்ணைகள், மற்றவர்கள் பரிந்துரைக்கும் கிரீம்கள் போன்றவை பயன்படுத்தி அதீதமாக எதையும் செய்ய வேண்டாம்.

கர்ப்ப காலத்தில் வயிற்று பகுதியானது பலூன் போல மெல்ல மெல்ல விரிவடைந்து கொண்டே போகும்.

 குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப விரிய ஆரம்பிக்கும் .

அதனால் சரும பகுதியும் விரிவடைந்து பிரசவத்துக்கு பிறகு சுருங்குவதால் தழும்புகள் ஏற்படும் .

தழும்புகள் பெரிதாக தெரிவது, அரிப்பது மட்டுமின்றி அந்தப் பகுதியில் உள்ள சருமம் வறண்டு போகாமல் பார்த்துக் கொள்வதும் கர்ப்ப காலத்தில் அவசியம் .

சரும வறட்சி காரணமாக வயிற்று பகுதியை சுற்றி அரிப்பு ஏற்படலாம். அதையும் தவிர்க்க வேண்டும் என்றால் தரமான மொய்ஸ்சரை தடவி வந்தாலே போதுமானது.

 உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உபயோகிக்கலாம் .

ஏன் எண்ணெய் தடவ கூடாது? 

என்ற கேள்வி சிலருக்கு எழும் .

எண்ணெய் தடவுவதன் மூலம் அந்த இடத்தில் பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதே காரணம்.

 அதனால் தான் மொய்ஸ் சரைசிங் லோசனை உபயோகிக்க பரிந்துரைக்கிறோம்.
 ஆரம்பத்தில் இருந்தே உபயோகிக்கும் போது தழும்புகள் பெரிதாக தெரிவதை தடுக்க முடியும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை