பிலிகிரி நகைகள்
பெண்கள் மனதை கவரும் வகையில் புதிய புதிய வடிவமைப்புடன் நகைகள் வெளிவருதை வாங்குவதில் அதிகம் ஆர்வம் கொள்கின்றனர் .
பார்த்தவுடன் இந்த நகை வடிவமைப்பு எவ்வளவு அழகாக உள்ளது. இதை எப்படி செய்திருப்பார்கள்? என்றவாறு பல கேள்விகளை எழுப்புவதில் தான் அதன் மதிப்பே உள்ளது.
அந்த வகையில் பெண்கள் அணிகின்ற நகையின் ஓர் வடிவமைப்பு உக்கி உருவாக்கும் முறை தான் பிலிகிரி வேலைப்பாடு.
அதித உன்னதமான மேம்பட்ட கைவினை வேலைப்பாடு என்பதில் தனித்து விளங்குவது பிலிகிரி வேலைப்பாடு.
தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இந்த பிலிகிரி வேலைபாட்டில் உருவாகின்றன.
பிலிகிரி வேலைப்பாடு மூலம் எந்த விதமான உருவம், வடிவம், வித்தியாசமான வழிகள் போன்றவற்றை உருவாக்க முடியும்.
ஒரே மாதிரியான தங்க நகைகளை வாங்கி அனுபவிப்பவர்களுக்கு வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட பிலிகிரி நகைகள் ஆர்வத்தை தூண்டுகின்றன.
தற்போது பல நகை விற்பனை கூடங்களிலும் தனிப்பட்ட பிலிகிரி நகைப் பிரிவுகளையே காணலாம்.
அதில் அதிகபட்சம் கலைநயம் மற்றும் ஜொலிக்கும் அமைப்புகள் கொண்டவாறு நகைகள் உருவாகின்றன.
பொதுவாக பளிச்சிடும் மஞ்சள் வண்ண தங்க நகைகள் என்பது பிலிகிரி நகைகளாக வெளிவரும் போது மாறுபட்ட மஞ்சள் , செம்மை, வெண்மை சாயலுடன் அதிக பளபளப்பு மற்றும் ஜொலிப்புடன் வருகின்றன.
சல்லடை போன்ற அமைப்புடன் பெரிய பாந்தமான நகைகள் முதல் சிறிய அளவிலான நகைகளும் உலா வருகின்றன.
பூக்கள் என்பது ஒவ்வொரு இதழ்களாக அடுக்க அடுக்குகளாக விரிந்தவாறு உள்ள அமைப்புடன் நகைகளால் உருவாக்கப்படுகின்றன.
பூக்கள் என்பது எடை அதிகரிக்காத வண்ணம் மெல்லிய கம்பிகளை கொண்டு இயந்திரம் மற்றும் கைவினை இணைந்தவாறு இதன் உருவாக்கம் உள்ளது .
வித்தியாசமான கோணம் மற்றும் வளைவுகளுடன் கூடிய பிலிகிரி நெக்லஸ் கழுத்தில் அணியும் போது புதிய ஓவியமாகவும் ,சிற்பமாகவும் ஜொலிக்கின்றன எனலாம்.
மற்ற நகைகள் போன்ற அழுத்தமான எம்போஸ் செய்யப்பட்ட வடிவமைப்புகள் காணாது. உயிரோட்டமான வடிவங்கள் கண்ணுக்கு விருந்தாகின்றன.
பிலிகிரி நகைகளில் அழகிய பிரேஸ்லெட்டுகள் ,காதணிகள், நெக்லஸ், சிறுசிறு மோதிரங்கள் போன்றவை நவீன உத்தியை பயன்படுத்தி மேம்பட்ட அழகுடன் உலா வருகின்றன.
பார்த்தவுடன் பரவசம் ஊட்டும் பிலிகிரி நகைகள் அதிக எடை இல்லாத மெல்லிய நகைகள் என்பதுடன் பிரம்மாண்டமான நகை தோற்றத்தை தருவதால் பெண்கள் விரும்பத் தொடங்கியுள்ளனர்.