மென்மையான பாதங்களுக்கு
கற்றாழியில் இருக்கும் சதை பகுதியை தினமும் இரண்டு முறை பூசி வந்தால் ஒரே மாதத்தில் வெடிப்பு சரியாகிவிடும்.
உருளைக்கிழங்கு சாற்றினை எடுத்து பாதங்களில் பூசி வந்தால் வெடிப்பு மறைந்து குதிங்கால்கள் அழகு பெறும்.
பப்பாளி பழத்தை பிசைந்து எலுமிச்சை பழச்சாறு கலந்து பாதங்களில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் வெடிப்பு குறையும்.
வெங்காயத்தை வதக்கி அரைத்து கால் பாதங்களில் தடவி வந்தால் கால் வெடிப்பு மறையும்.
எலுமிச்சை பழ தோளால் பாதங்களை நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி பாதத்தை சுத்தமாக்கும். மேலும் கிருமிகள் தங்காது.
கடுகு எண்ணெயை தினமும் கால், பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வந்தால் சொரசொரப்பு நீங்கும் மென்மையான பாதங்களாக திகழும்.
தினமும் தூங்குவதற்கு முன் விளக்கெண்ணையை பாதத்தில் தேயுங்கள் சுரசுரப்பான பாதம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.
தயிரை பாதங்களில் தடவி பிரஸ்ஸினால் வெடிப்புகளில் தேய்க்க வேண்டும் மறுநாள் உப்பு அல்லது சோடா உப்பை குதிங்காலில் தேய்த்து தொடர்ந்து இப்படி மாறி மாறி வரும் மூன்று முறை செய்தால் பாதம் மெத்தென்று ஆகும் .
மருந்தாணி பவுடருடன் டீத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து பாதங்களில் தேயுங்கள் பத்து நிமிடங்கள் கழித்து பாதத்தை கழுவலாம். இது கால் வெடிப்பை நீக்கி உடலை குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது.
மருந்தாணி இலையுடன் எலுமிச்சை சாறு விட்டு விழுதாக அரைத்து கால் வெடிப்புகளில் பூசி வர கால் வெடிப்பு குணமாகும்.