ஆரோக்கியத்தை பாதுகாக்கும் 5G

ஆரோக்கியத்தை பாதுகாக்கும் 5G

இஞ்சி (Ginger)
பூண்டு (Garlic)
பச்சை மிளகாய் (Green Chilli )
 கிரீன் டீ (Green tea) 
நெல்லிக்காய் (Gooseberry)

இஞ்சி 
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இஞ்சி உதவுகிறது.

 ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது உடன் இதயம் தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்கவும் உதவுகிறது.

 செரிமானத்தை மேம்படுத்துகிறது.

 பெண்களுக்கு மாதவிடாய் வலிக்கு நிவாரணமாக உள்ளது.

 எல் டி எல் என்ற கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடையை சம நிலையில் வைத்து உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

 எனவே சமையலில் அடிக்கடி இஞ்சியை பயன்படுத்தலாம்.

 அதே வேளையில் அளவாக பயன்படுத்த வேண்டும்.

 பூண்டு 
வைட்டமின் சி, பி6, செலினியம், மாங்கனிசு உட்பட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் பூண்டில் நிறைந்துள்ளன.

 இது கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் உட்பட பல்வேறு பாதிப்புகளை தவிர்க்க உதவுகிறது.

 இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

 பச்சை மிளகாய்
 இதில் அதிக அளவு வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.

 இதில் உள்ள வைட்டமின் ஈ சத்து சருமத்தில் எண்ணெய் பசையை தக்க வைக்கிறது.

 மிளகாய் மூளைக்குள் என்டோர்பின்ஸ் உற்பத்தியை சீராக்கி மனநிலையை மேம்படுத்து உதவுகிறது.

 இதில் உள்ள ஆன்டி பாக்டீரியா தன்மைகள் நுரையீரலில் புற்றுநோய் ஏற்படும் பாதிப்பு குறைகிறது.

 மூச்சுக்குழாய், அலர்ஜியை சரி செய்ய  உதவுகிறது.

 கிரீன் டீ 
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

 இந்த கிரீன் டீ மன அழுத்தம் மற்றும் மன சோர்வை தவிர்க்கவும் உதவுகிறது.

 இதில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் சருமத்தை மேம்படுத்துகிறது.

 டைப் ரெண்டு நீரழிவு பாதிப்பை குறைக்கும் .

நெல்லிக்காய்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல் ,ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்தல், கொலஸ்ட்ராலை சமன் செய்தல், செரிமானத்துக்கு உதவுதல் உட்பட பல்வேறு நன்மைகளை நெல்லிக்காய் அள்ளித் தருகிறது.

கருத்துரையிடுக

புதியது பழையவை