உடலை காக்கும் குடம்புளி
தென்னிந்திய வீடுகள் மற்றும் உணவகங்களில் புளி இல்லாத சமையலை இல்லை என்று சொல்லும் அளவுக்கு புளி நம்மை ஆக்கிரமித்து இருக்கிறது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது மூதாதையர் சமையலுக்கு குடம்புளியை பயன்படுத்தி இருக்கின்றனர்.
உடல் எடையை குறைக்கும்.
இதயத்தை காக்கும் மூளையின் செயல்பாடுகளை தூண்டும் ஆற்றல் பெற்றது.
குடம்புளி இதற்கு கொடம்புளி, கொருக்காப்புளி, கொக்கம் புளி, சீமை கொறுக்காய், மலபார்புளி என பல பெயர்கள் உள்ளன.
குடம்புளி செரிமான உறுப்புகளை தூண்டி அவற்றின் சக்தியை அதிகரிக்கும் .
உடல் எடையை குறைக்கும் மருந்து வகைகளில் மிக முக்கியமான மூலப்பொருட்களாக குடம்புளி பயன்படுகிறது.
இதில் உள்ள ஹைட்ராக்ஸிசிட்ரிக் ஆசிட் இதயத்தைக் காக்கக்கூடியது.
அத்துடன் மூளையின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும்.
தசைகளையும், தசை நாறுகளையும் உறுதியாக்கி ஆற்றலை அதிகரிக்கும்.
ரத்த கொழுப்பை கரைக்க உதவும்.
இதில் உள்ள துவர்ப்பு சுவை வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும்.
மனிதர்களுக்கு மட்டுமின்றி கால்நடைகளுக்கு ஏற்படும் வயிற்று உபாதைகளுக்கும் மருந்தாக தரப்படுகிறது.
இதன் பழ தோளில் தயாரிக்கப்படும் ஜுஸ் வாதம் மற்றும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு சிறந்த மருந்து.
குடம்புளியை அவ்வப்போது சமையலில் சேர்த்து வந்தால் முதுமை காலத்தில் ஏற்படும் மூட்டு வலி பிரச்சனைகளிலிருந்து காத்துக் கொள்ளலாம்.
குடம்புளியில் உள்ள புளிப்பு சுவை மூளையை சுறுசுறுப்பாகும்.
தசைகளுக்கு புத்துணர்வு ஊட்டும்.
உடலில் உள்ள வாத நாடியை சிறப்பாக்கும் பண்பு குடம்புளிக்கு உண்டு .
அடிக்கடி உடலில் இதை சேர்க்கும்போது நரம்பு தொடர்பான பிரச்சனைகள் சரியாகிறது.
செரிமானமும் இயல்பாகிறது.
சாதாரண புளிக்கு பதிலாக குடம்புளியை பயன்படுத்தி வந்தால் உடலில் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
கொழுப்பை கரைப்பதில் குடம்புளி முக்கிய பங்கு வகிப்பதால் டயட் இருப்பவர்கள் இதை தாராளமாய் பரிசீலிக்கலாம்.
புளியின் துவர்ப்பு மூளைக்கு நல்லது இதனால் குழந்தைகளுக்கு இதனை தரலாம் .
குடம்புளியில் ரசம் வைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது.