சமைத்தல் என்றால் என்ன?
சமைத்தில் என்ற சொல்லுக்கு பக்குவப்படுத்துதல் என்பது பொருள்.
அடுப்பில் ஏற்றி சமைப்பது அடுதல் எனப்படும்.
சமையல் செய்யப்படும் இடம் அட்டில் அல்லது அடுக்களை தமிழர்களின் வீட்டு அமைப்பில் வீடு எந்த திசை நோக்கி அமைந்திருந்தாலும் சமையலறை வீட்டின் வடகிழக்கு அல்லது தென்மேற்கு மூலையிலேயே அமைக்கப்படும்.
நீரிலிட்டு விட்டு அவித்தல் ,அவித்து வேகவைத்தல், வறுத்து அவித்தல், சுடுதல், வற்றல் ஆக்குதல் எண்ணெயில் இட்டுப் பொரித்தல், வேகவைத்து ஊறவைத்தல் ஆகியன சமையலின் முறைகள் நகர்ப்புற மையமாதல் தொடர்பு சாதனங்களின் விளம்பரத்தன்மை பொருளியல் வளர்ச்சி பயண அனுபவங்கள் ஆகியவை காரணமாக கடந்த ஒரு நூற்றாண்டு காலத்திற்குள் தமிழர்களின் உணவு முறைகள் மிகப்பெரிய அளவில் நவீன மாறுதல் அடைந்திருக்கிறது.
காய்கறி என்ற சொல் காய்களையும், மிளகையும் சேர்த்து குறிக்கும்.
கிபி 15 ஆம் நூற்றாண்டில் தான் சில நாட்டிலிருந்து வந்த மிளகாய் தமிழ்நாட்டிற்குள் புகுந்தது.
அதுவரை தமிழர் சமையலில் உரைப்பு சுவைக்காக கருப்பு மிளகினை மட்டுமே பயன்படுத்தி வந்தனர் .
இறைச்சி உணவிற்கு அதிகமாக கறியிணை பயன்படுத்தியதால் இறைச்சியே கறி என பின்னர் வழங்கப்பட்டது.
வெள்ளை மிளகினை தமிழர் குறைவாகவே பயன்படுத்தினர்.
பழந்தமிழர் உணவு வகைகளை கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மை புலம்படும் .
தமிழர் உணவு முறைகளில் வறுத்தும், சுட்டும், அவிழ்த்தும் செய்யப்படும் உணவு பண்டங்களே அதிகமாக இருந்தன.
எண்ணெயில் இட்ட பண்டங்கள் அண்மை காலங்களிலேயே மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இவற்றின் தயாரிப்பில் அதிகமாக பயன்படுத்தப்படும் நிலக்கடலை எண்ணெய் விஜய நகர ஆட்சிக்காலத்திலேயே இங்கு அறிமுகமானது.