நடைப்பயிற்சி- னா சும்மாவா....
நடைபயிற்ச்சி செய்யும் முன்
நடைபயிற்சி செய்யும் வார்ம் அப் செய்வது அவசியம்.
அது என்ன வார்ம் அப் என்கிறீர்களா?
நம் உடலை நடைபயிற்சி செய்ய ஏற்பாடு செய்வது.
இதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து உடல் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்கும்.
நடைபாதை சீராக இருக்கிறதா? என்பதை கவனிக்க வேண்டும் .
மேடு, பள்ளமான சாலையில் நடப்பதை தவிர்க்க வேண்டும்.
ஏற்கனவே இதயம், சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகள் இருந்தால் தன் குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை செய்த பின்பு நடைப்பயிற்சி செய்யலாம்.
கால், மூட்டு வலி, இடுப்பு வலி ஒரு பக்கமாக சாய்ந்து நடப்பது போன்றவை இருந்தால் தன் குடும்ப இயன்ற முறை மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
காலணிகள் எது சுமூக அதிகமாக இருக்கிறதோ அதனை தேர்வு செய்ய வேண்டும்.
இறுக்கமான காலணிகளை கட்டாயம் தவிர்ப்பது முக்கியம்.
அதேபோல் இறுக்கமான ஆடைகள் காட்டன் அல்லாது ஆடைகளை தவிர்ப்பது நல்லது.
நடக்கும் போது கைகளை முன்னும் பின்னும் இலகுவாக அசைத்து நடக்க வேண்டும்.
விறுவிறுவென நடத்தல் இன்னும் டல் பயன்களை விளைவிக்கும்.
பேசிக்கொண்டு, வேடிக்கை பார்த்துக்கொண்டு, தொலைபேசி பார்த்துக் கொண்டு , தொலைபேசியில் பேசிக்கொண்டு நடந்தால் நடை வேகம் குறையும் .
இதனால் பலன்கள் உண்டாகாது.
மேலும் விபத்துக்கள் ஏற்படலாம்.
நடை பயிற்சி செய்த பின்
நடைப்பயிற்சி செய்து முடித்ததும் கூல் டவுன் செய்வது அவசியம்.
கூல் டவுட் என்பது தசைகளை தளர்த்த செய்ய வேண்டிய பயிற்சிகள்.
இதனால் நடைபயிற்சி செய்து முடித்த பின் வரும் தசை அலுப்பை தடுக்க முடியும் .
அதோடு மீண்டும் நாம் வீட்டுக்கு வந்து எப்போதும் செய்யும் வேலைகளை செய்வது சுலபமாய் இருக்கும் .
எவ்வளவு நேரம் உடலில் உள்ள கொழுப்புச் சத்து குறைய நினைப்போர் குறைந்தது ஒரு மணி நேரமாவது நடக்க வேண்டும்.
எந்த பிரச்சினையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் 30 முதல் 45 நிமிடங்கள் வரை நடக்கலாம்.
பத்தாயிரம் அடிகள் தான் ஒரு நாளில் நடக்க வேண்டும் என்பது இல்லை.
ஒரு நாளைக்கு 5000 அடிகள் நடப்பதை போதுமானது தான்.
மயில்கள் கணக்கில் சொல்ல வேண்டும் எனில் இரண்டு முதல் மூன்று மைல்கள் வரை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்தில் நடக்கலாம்.
பலன்கள் உடற்பயிற்சி செய்வதால் என்னென்ன நன்மைகள் விளைவிக்குமோ? அதெல்லாம் நடைப்பயிற்சியிலும் இருக்கிறது.
மற்றவர்களுக்கு பரவாத வாழ்வியல் நோய்களான இதய கோளாறு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், உடற்பருமன், அதிக கொழுப்பு சத்து கோளாறு, தூக்கமின்மை, மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
மேலும் ஒரு வாரத்திற்கு மூன்று மணி நேரம் நடந்தால் வயதான பின்வரும் நடுக்கம், ஞாபகம் மறதி இல்லாமல் கீழே விழுதல் போன்ற பாதிப்புகளையும் தவிர்க்கலாம் அல்லது தள்ளிப் போடலாம்.
கர்ப்பிணிகள் தினமும் நடைபயிற்சி செய்வதால் சுகப்பிரசவம் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
உடற்பயிற்சி செய்ய வேண்டும் எனில் ஒரு சில உபகரணங்கள் தேவைப்படும்.
மேலும் கொஞ்சம் சிரமமாக இருக்கும் ஆனால் நடைப்பயிற்சி அப்படி இல்லை சுலபமாகவும் செலவில்லாமலும் செய்யலாம்.
தவறாக செய்தால் நாம் நம் நடையை முதலில் கவனிக்க வேண்டும்.
ஒரு சிலர் பாதங்களை வெளிநோக்கி வைத்து நடப்பார்கள்.
இன்னும் சிலர் ஒவ்வொரு காலிலும் முழு உடல் எடை விழும்படி இரு பக்கமும் சாய்ந்து நடப்பார்கள் .
இவ்வாறு நடந்தால் எளிதில் மூட்டு வலி, மூட்டு தேய்மானம் போன்றவை ஏற்படலாம்.
மேலும் இதனால் தசைகளும் நாளடைவில் பாதிப்பு அடையும்.
முதுகு வலி, கால் சுளுக்கு களுக்கு ஜவ்வு பலவீனம் ஆவது போன்றவை நிகழலாம்.
வார்ம் அப் மற்றும் கூல் டவுன் செய்யவில்லை எனில் தசைகள் ஒரு பக்கம் இறுக்கமாகவும் மறுபக்கம் பலவீனமாகவும் மாறும்.
இதனால் மூட்டுகளில் வலி, தசைவல்லி, தசைகளில் காயம் போன்றவையும் நிகழலாம் .
நடை பயிற்சி செய்தால் நன்மை விளையும் .
ஆனால் நடைப்பேசி செய்தும் நம் உடலில் வலி ஏற்படுகிறது எனில் நாம் நடைபயிற்சியில் எங்கு தவறு செய்கிறோம் என்பதை கவனிக்க வேண்டும்.
ஆகவே உண்மையான உடற்பயிற்சியான நடை பயிற்சியை வாக்கிங் தான்.
இதுல என்ன அப்படி பெருசா தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு என நினைக்காமல் நம் நடைபயிற்சிக்கான மாற்றங்களை அறிந்து செயல்பட்டால் நோய்கள் அற்ற சமூகமாய் நாமும் வாழலாம்.