பீட்சாவுக்கு எந்த ஊரு

பீட்சாவுக்கு எந்த ஊரு 
இன்றைய இளசுகளின் பேவரைட் டிஷ் என்றால் அது பீட்சாதான்.

  ஒரு காலத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே இருந்த பீட்சா கடைகள் இப்போது சிறுநகரங்களிலும் சிற்றூர்களிலும் கூட முளைத்துவிட்டன.

 இன்று ஜென் z தலைமுறையின் பார்ட்டியோ, பஞ்சாயத்து இது என்றாலும் பீசா கடையில் தான் நடக்கின்றன .

அந்த அளவுக்கு நம் நவீன வாழ்வோடு ஒன்று கலந்து விட்ட பீட்சாவின் பூர்வீகம் எந்த நாடு தெரியுமா இத்தாலி தான்.

 பீட்சா என்று சொல் பழகியது கிட்டத்தட்ட 1000 வருடங்களுக்கு முன்பே இத்தாலியின் காட்டா நகரில் பீட்சா பரிமாறப்பட்டதாக ஆவணங்கள் சொல்கின்றன.

 ஆனால் அது இன்று நாம் சாப்பிடும் பீட்சா அல்ல ஃபோகாசியா என்ற ரொட்டிதான் பீட்சாவின் பாட்டி என்கிறார்கள்.

 கிட்டத்தட்ட பீட்சா போல அதுவும் தயாரிக்கப்பட்டாலும் மேலே டாப்பிங்ஸ் மட்டும் இருந்திருக்காது அந்த வடிவில் கொஞ்சம் மாறுதல் ஏற்பட்டு பீட்சா உருவானது.
 பதினெட்டாம் நூற்றாண்டில் இத்தாலியின் நேப்பில் நகரில் பீட்சாவின் மேல் தக்காளி மற்றும் தக்காளி சாஸை டாப்பிங்சாக சேர்க்கத் தொடங்கிய பிறகுதான் தற்போதைய நவ நாகரீக பீசா உருவானது.

கருத்துரையிடுக

புதியது பழையவை