தொற்று நோய்களை தடுக்கும் கருப்பு உலர் திராட்சை

தொற்று நோய்களை தடுக்கும் கருப்பு உலர் திராட்சை 
நம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமான ஒன்று சத்தான உணவு பொருட்கள் தான் .

தினமும் நாம் ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் உடல்நல குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

 கருப்பு உலர் திராட்சையில் அதிக நார்ச்சத்து உள்ளது .

அது மட்டும் இன்றி பொட்டாசியம், புரதம் மற்றும் இரும்பு சத்துக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

 தினமும் இரவில் ஆறு கருப்பு உலர் திராட்சையை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் எதிர்ப்பு திறன் பயன்களை பெறலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கருப்பு உலர் திராட்சையில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

 இதில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.

 அதுமட்டுமின்றி இது தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

 தொற்று நோய் ஏற்படும் அபாயத்தையும் குணப்படுத்துகிறது.

 கருப்பு உலர் திராட்சியை ஊறவைத்து சாப்பிடுவதால் ரத்த சோகை குணமாகிறது .

ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

 ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் கருப்பு திராட்சையை ஊறவைத்து சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கிறது.

 எலும்பு ஆரோக்கியம் இதில் அதிகளவு.

 இரும்பு சத்து இருப்பதால் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

 இதில் பாஸ்பரஸ் மற்றும் போரான் கால்சியம் போன்ற கனிம சத்துக்கள் இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது .

கை, கால் வலி போன்ற எலும்புகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம் .

கண்களை பாதுகாக்க ஊறவைத்த திராட்சைகளில் பாலிஃபீனல்கள் மற்றும் டைட்டோ நியூட்ரியன்ட்கள் என்ற ஆக்சிஜனேற்றிகள் அதிகம் ஆக இருப்பதால் இது கண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது .
அது மட்டும் இன்றி கண் புரை மற்றும் கண் தொடர்பான உபாதைகள் வராமல் தடுக்கிறது.

கருத்துரையிடுக

புதியது பழையவை