உலகின் வித்தியாசமான நாடு

உலகின் வித்தியாசமான நாடு
உலகில் மொத்தம் 236 நாடுகள் உள்ளன.

 அவற்றில் 204 ஆவது நாடு ஐரோப்பியா யூனியனில் மிகச் சிறியது மால்டா என்னும் நாடு .

உலக அளவில் சிறிய நாடு இதன் மொத்த நீளம் 30 கிலோமீட்டர்,அகலம் 15 கிலோமீட்டர்.

 ஆனால் கிறிஸ்து பிறப்பதற்கு முன் 5000 ஆண்டுகள் வரலாறு கொண்ட இடம் .

இங்கு பலருக்கு உப்பு எடுப்பது முக்கிய தொழில் .

நாடு முழுவதும் உப்பு நீரில் இருந்து நல்ல தண்ணீரைப் பிரிக்க பல தொழிலகங்கள் உள்ளன.

 குழாய் தண்ணீரை குடிக்கலாம் ஆனால் அதைவிட வாங்கி குடிப்பது நல்லது.

 ஜனத்தொகை ஆறு லட்சம்.

 பெரும்பாலானோர் கார் பிரியர்கள்.

 அதனால் மூணு லட்சத்து 97 ஆயிரம் வாகனங்கள் உள்ளன.

 அரைமணியில் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு சென்று விடலாம்.

 ஜனத்தொகையைப் போல மூன்று பங்கு சுற்றுலா பயணிகள் வருகின்றன.

 இங்குள்ள பொலட்டா 1565 ஆம் ஆண்டிலேயே திட்டமிட்டு கட்டப்பட்டது ஆகும் .

கூட்டுப்படைக்கு ஆதரவாக இருந்ததால் இரண்டாம் உலகப்போரில் இந்த நாடு ஜெர்மனி மற்றும் இத்தாலியிடமிருந்து ஏகப்பட்ட குண்டு வீச்சுக்களை தாங்க வேண்டியிருந்தது.

 1500 அப்பாவிகள் இறந்தனர். 

இதை ஒட்டிய கடலில் கரை ஒதுங்கிய கப்பல்கள் ,நீர் மூழ்கி கப்பல்கள், சண்டையிடும் விமானங்களில் சீரழிவை இன்றும் காணலாம்.

 தலைநகரம் வல்லலெட்டா என்ற நகரமாகும்.

 இது யுனெஸ்கோ பாரம்பரிய இடங்களில் ஒன்றாக உள்ளது.

 இது தவிர " இரு" யுனெஸ்கோ பாரம்பரிய இடங்கள் உள்ளன.

 பழங்கால கட்டிடங்கள், சர்ச்சுகளுக்கு இங்கு பஞ்சமில்லை.

 ஆறு லட்சம் ஜனத்தொகைகளுக்கு இங்கு 365 சர்ச்சுக்கள் உள்ளன.

 இவற்றில் பிரம்மாண்டம் நம்மை வியக்கும்.

 கசப்பு அருஞ்சிலிருந்து காபி தயாரித்து அதனை விரும்பி சாப்பிடுவர்.

 சுண்ணாம்பு கல்லால் ஆன கட்டிடங்கள், மஞ்சள் சாம்பல் வண்ணத்தில் வித்தியாசமாய் ஜொலிக்கும்.

 கிறிஸ்து பிறந்த பின் அறுபதாம் ஆண்டு செயின்ட் பால் சென்ற கப்பல் இங்கு உடைந்து ஒதுங்கி
விட்டது.

 இதனால் கரைக்கு வந்தவர் அந்த நாட்டினர்.

 அனைவரையும் கத்தோலிக்க மதத்திற்கு மாற்றி விட்டார்.

 அதனால் உலகில் கிறிஸ்துவ மதம் பரவிய ஐரோப்பிய நாடுகளில் மால்டாவும் ஒன்று.

 இங்கு உள்ளவர்கள் கண்ணாடி தயாரித்தல் ,ஷூ லேஸ் தயாரிப்பு ஆகியவற்றில் பிரபலமானவர்கள்.

 இந்த நாட்டிற்குள் எரிமலை கிடையாது.

 ஆனால் சுற்றி கடலில் எரிமலைகள் உள்ளன .

மால்டா மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட தீவு .

உண்மையில் மால்டா நாடு ஐந்து தீவுகளால் ஆனது.

 இதில் மூன்றில் மக்கள் வசிக்கின்றனர்.

 இரண்டில் மக்கள் கிடையாது.

 மக்கள் வசிக்கும் தீவுகளில் ஒன்றான கோகோவுக்கு சொகுசு படகு மூலம் செல்ல வேண்டும் .

20 நிமிட பயணம் தான்.

 இந்த நாட்டின் அழகு என்னவென்றால் வெதுவெதுப்பான கிளைமேட்.

 கண் கவரும் இயற்கை அமைப்புகள்.

 இடைவெளிகளுடன் கூடிய செங்குத்தான உயர அமைப்புகள்.

 அரைவட்ட விரிகுடாக்கள்.

 இயற்கையாய் உருவாகிய குகை என எல்லாம் உண்டு.

 இதனால் இங்கு திரைப்படங்கள், டிவி சீரியல்களுக்கு சூட்டிங் எடுப்பது சகஜம்.

 நூதனமாக இங்கு இளவேனிற் காலத்தில் பறவைகள் வேட்டையாட அனுமதி உண்டு .இப்படி அனுமதிக்கப்பட்டுள்ள (ஐரோப்பிய யூனியன்) ஒரே நாடு.

 வருடத்திற்கு 14 நாட்கள் அரசு விடுமுறை உண்டு .

75 கிராமங்கள் உண்டு .

இவற்றில் ஜூன் முதல் செப்டம்பர் வரை மாறி மாறி கொண்டாட்டம் விருந்து உண்டு .

அவ்வப்போது வான வேடிக்கை, மத ஊர்வலம் பேண்ட் வாத்தியங்களுடன் நடக்கும் .

ஒரே ஒரு பல்கலைக்கழகம் உள்ளது.

 இது 1592 ஆம் ஆண்டு முதல் இன்று வரை உள்ளது.

 பிரிட்டனுக்கு வெளியே மிகப் பழமையான பல்கலைக்கழகம் இங்குதான் உள்ளது.

 11 வெளிநாட்டினர் அவ்வப்போது படையெடுத்து பிடித்துள்ளனர்.

 இப்படி 2000 வருடங்கள் ஆக்கிரமிப்புகளை கண்டவர்கள்.

 கடைசியாக பிரிட்டன் பிடித்து 1964இல் விடுதலை தந்தது.

 1974 இல் குடியரசு ஆனது.

 ஐரோப்பிய யூனியனில் 2004 ஆம் ஆண்டு சேர்ந்தது.

 மத்திய தரை கடலில் சுருங்கிய பகுதியில் கிழக்கு முனையில் உள்ளது.
 மால்டா சிசிலி மற்றும் இத்தாலி நாட்டின் இடையே உள்ளது.

கருத்துரையிடுக

புதியது பழையவை