முகத்தில் கரும்புள்ளிகளா கவலையை விடுங்க
பொதுவாக ஆண், பெண் என இருவருக்குமே முகத்தில் தாடை பகுதியில் மூக்கின் மேல் பகுதியிலும் உருவாகும் கரும்புள்ளிகள் உண்டாவது வழக்கம் .
இதனை நீக்குவது என்பது பலருக்கும் கடினமான ஒரு விஷயமே.
முகத்தில் அதிகமாக சேரக்கூடிய எண்ணெய் பசையாலும், செல்கள் இறப்பதும் குறைவாக இருப்பதினாலும் இதுபோன்று கரும்புள்ளிகள் முகத்தில் ஏற்படக்கூடும் .
இதை எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே நீக்க முடியும் எப்படி என்பதை பார்ப்போம்.
1: எலுமிச்சை சாறுடன், சர்க்கரையை சேர்த்து கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீக்குவதோடு சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி சருமம் பளிச்சென்று காணப்படும்.
2: உருளைக்கிழங்கை நறுக்கி அதனை முகத்தில் 15 நிமிடம் கழித்த பின்னர் காய வைத்து குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்.
இதனால் கரும்புள்ளிகள் படிப்படியாக நீக்கிவிடும் .
3:வெந்தயக் கீரையை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின் அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் காய வைத்து பிறகு கழுவ வேண்டும்.
இதனை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.
4: கொத்தமல்லியுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி காய வைத்து கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.
இதை வாரம் ஒரு முறை செய்யலாம்.
5: இரண்டு டேபிள்ஸ்பூன் தயிரை ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் கலந்து தடவி வந்தால் கரும்புள்ளிகள் சீக்கிரம் போய்விடும் .
எலுமிச்சம் சாற்றினை ஒரு மெல்லிய துணியினாலோ, மிருதுவான பஞ்சினாலோ தொட்டு பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள் .
ஐந்து முதல் ஆறு நிமிடங்கள் அதனை அப்படியே காய விடுங்கள் அதன் பிறகு முகத்தை நன்றாக கழுவி விடுங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.