முடி வளர்ச்சிக்கு உதவும் நெல்லிக்காய்

முடி வளர்ச்சிக்கு உதவும் நெல்லிக்காய்
நீண்ட கருமையான கூந்தல் பல பெண்களின் விருப்பமாகும்.

 ஆனால் ஹார்மோன் கோளாறுகள் மற்றும் மன அழுத்தம் காரணமாக முடி உதிர்வு, இளநரை போன்ற பிரச்சனைகளால் பெரும்பாலான பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

 இதற்கு சிறந்த தீர்வாக இருப்பது நெல்லிக்காய் .

இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

 உலர்ந்த நெல்லிக்காய் பொடியுடன் ஒரு முட்டையின் வெள்ளை கருவை கலந்து கொள்ளுங்கள்.

 இந்த கலவையை முடியின் வேர்க்கால்களில் பூசி சிறிது நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும்.

 நெல்லிக்காயில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்கள் ,வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை தூண்டும் .

நெல்லிக்காய் பொடியை தயிருடன் கலந்து உச்சந்தலையில் தடவி 20 நிமிடம் அப்படியே வைத்திருங்கள்.

 இது முடி வளர்ச்சிக்கான சிறந்த ஹேர்பேக் ஆகும்.

 தலைக்கு எண்ணெய் தேய்த்த பின்பு இதை பயன்படுத்துவது சிறந்தது.

 20 நிமிடம் கழித்து கூந்தலை தண்ணீரில் நன்றாக சுத்தப்படுத்துங்கள்.

 நெல்லிக்காயில் இயல்பாகவே சுத்தப்படுத்தும் தன்மை உள்ளது என்பதால் ஷாம்பு பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

 இந்த ஹேர் பேக் பொடுகு போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும்.

 நெல்லிக்காயில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் இளநரையை தவிர்க்கலாம்.

 இது உச்சந்தலையில் ஏற்படும் வறட்சியையும் தடுக்கும் .

நெல்லிக்காய் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ முடிக்கு பளபளப்பையும், மென்மையான தோற்றத்தையும் அளிக்கும்.

 இதை கண்டிஷனராகவும் பயன்படுத்தலாம் .

நெல்லிக்காய் எண்ணெயை வீட்டிலேயே தயாரிக்கலாம் :

விதைகள் நீக்கிய - ஐந்து முதல் ஏழு நெல்லிக்காயுடன் கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

 அதனுடன் 200 மில்லி தேங்காய் எண்ணெய் கலந்து மிதமான சூட்டில் கொதிக்க வைத்து வடிகட்டினால் நெல்லிக்காய் எண்ணெய் தயார்.

 இதை தலையில் மென்மையாக மசாஜ் செய்து குளித்தால் முடி வளர்வதோடு தூக்கமின்மையும் சரியாகும் .

தினமும் நெல்லிக்காய் சாறு குடிப்பது, முடி உதிர்வை தடுப்பதோடு முடியும்.
 வேர்க்கால்களுக்கு ஊட்ட மளித்து வளர்ச்சியை ஊக்குவிக்கும்.


கருத்துரையிடுக

புதியது பழையவை