உடைகள் பராமரிப்பு

உடைகள் பராமரிப்பு
அன்றாட வாழ்வில் உடைகளின் பராமரிப்பு என்பது அத்தியாவசியமான ஒன்றாகும்.

 நம் உடைகளை தூய்மையானதாகவும், விரைவில் கிழிந்து போகாமலும் பராமரிக்க சில வழிமுறைகளை பார்ப்போம்.

 ஈரத்துணிகளை காய வைக்க அலுமினியத்தால் ஆன ஹேங்கர்களை பயன்படுத்த வேண்டும் ,மரத்தால் ஆன ஹேங்கர்கள் துணிகளின் மேல் கரையை ஏற்படுத்தி விடும்.

 உடைகளை உப்பு கலந்த நீரில் நனைந்து பின்னர் துவைத்தால் சாயம் போகாது.

 வண்ண உடைகளை வெயிலில் உலர்த்த கூடாது .துணியில் நீலம் சீராக உப்பு கலந்த பிறகு துணியை அதில் நினைக்கவும்.

 சோப்புக்கட்டியை நன்கு சீவி அதனை சோப்புத்தூளுக்கு பதிலாக உபயோகிக்கலாம் ...

புடவைகளில் எண்ணெய் கரை படிந்துள்ள இடத்தில் டால்கம் பவுடரை பூசி வடித்து ஒரு வாரம் வரை அப்படியே வைத்திருந்து பிறகு பவுடரை தட்டி விட்டால் எண்ணெய் கரை நீங்கிவிடும் .

வியர்வைத் துணிகளை உடனுக்குடன் துவைத்து குளிர்ந்த நீரில் நனைத்து விட்டால் மஞ்சள் கரை ஏற்படாது.

 உல்லன் துணிகளை வெதுவெதுப்பான தண்ணீரில் சோப்பு பவுடரை கரைத்து மூன்று நிமிடம் ஊற வைத்து பிறகு கசக்காமல் எந்த இடத்தையும் தேய்க்காமலும், பிழியாமலும் அப்படியே தொங்கவிட்டு தண்ணீர் வடிந்து தானாகவே காயும் படி விட்டு விட வேண்டும்.

 அடர் நிற உடைகளை கஞ்சி போடும்போது உடைகளை திருப்பி உள்பக்கம் வெளியே வருமாறு போட்டால் வெளிப்புறத்தில் கஞ்சி வெள்ளையாக தெரியாது.
 உடைகளின் உட்புறத்தில் ஒரு பகுதியை மட்டும் நனைத்து அதன் மேல் ஒரு உலர்ந்த வெள்ளை துணியை வைத்து தேய்த்து பார்த்தால் உடை சாயும் போகுமா? இல்லையா? என்பது தெரிந்துவிடும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை