தபாலில் அனுப்பப்பட்ட குழந்தைகள்

தபாலில் அனுப்பப்பட்ட குழந்தைகள்

 அமெரிக்க அஞ்சல் துறை 1913 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி பார்சல் சேவையை தொடங்கியது .

முதலில் பார்சலில் நியூ ஜெர்சி கவர்னர் உட்ரோவில்சனுக்கு சுமார் ஐந்து கிலோ ஆப்பிள் அனுப்பப்பட்டது.

 ஆரம்ப காலத்தில் ஒன்றே முக்கால் கிலோவுக்கு அதிகமான எடையுள்ள பொருட்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுப்பப்பட்டன.

 ஆனால் தபால் மூலம் என்னென்ன பொருட்களை அனுப்பலாம், எவற்றையெல்லாம் அனுப்பக்கூடாது என்பது பற்றிய எந்த விதிமுறைகளும் அப்போது தெளிவாக இல்லை.

 எனவே மக்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப முட்டைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை தபாலில் அனுப்ப தொடங்கினர் .

சிலர் இதை சோதித்து பார்ப்பதற்காக பாம்புகள் போன்ற பகீர் பொருட்களையும் பார்சலில் அனுப்பினர் .

அமெரிக்க தேசிய அஞ்சல் அருங்காட்சியகத்தின் வரலாற்று பொறுப்பாளர் நான்சி போப் தபால் துறை சர்வீஸ் இன் முதல் சில வருடங்கள் கொஞ்சம் குழப்பமாக இருந்ததாகவும் சில பொருட்கள் அந்தந்த பகுதி போஸ்ட் மாஸ்டரின் விருப்பத்தை பொறுத்தே ஏற்றுக் கொள்ளப்பட்டன என்றும் கூறுகிறார்.

 1913 ஆம் ஆண்டு ஜனவரியில் ஓகியோவை சார்ந்த ஒரு தம்பதியினர் அமெரிக்க தபால் துறையின் புதிய பார்சல் சாவியை பயன்படுத்தி தங்கள் செல்ல மகனை பார்சலில் அனுப்பினார்கள்.

 அவர்கள் மகனின் ஸ்டாம்ப் செலவுக்கு 13 சென்ட்களும் இன்சூரன்ஸ் தொகையும் செலுத்தினர்.

 பின்னர் குழந்தையை தபால்காரர்களிடம் ஒப்படைத்தனர்.

 அவர் குழந்தையை அருகில் உள்ள அதன் பாட்டி வீட்டில் கொண்டு போய் தபால்காரர் இறக்கி விட்டார்.

 1913 முதல் 1915 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மேற்கண்ட ஓகியோவில் குழந்தைகள் தொடங்கி ஏழு குழந்தைகள் தபாலில் அனுப்பப்பட்டார்கள் .

நீண்ட தூர பயணிகள் ரயிலில் குழந்தைக்கு டிக்கெட் வாங்குவதை விட ரயில்வே மெயில் மூலம் அனுப்ப ஸ்டாம்ப் வாங்குவது மிகவும் மலிவானதாக இருந்ததே இதற்கு காரணம்.
 மற்றொரு முக்கிய காரணம் தபால் துறை தங்கள் குழந்தையை குறிப்பிட்டு இடத்தில் பத்திரமாக கொண்டு போய் சேர்க்கும் என்ற பெற்றோரின் நம்பிக்கை.

கருத்துரையிடுக

புதியது பழையவை