குளிர்கால பேஸ் பேக்
குளிர்காலம் வந்துவிட்டாலே வறண்ட சருமம், முகச்சுருக்கங்கள் என படையெடுக்கும் .இதோ தடுக்க சில பேஸ் பேக் டிப்ஸ்கள்:
1. முட்டையின் வெள்ளை கருவில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து பேஸ்ட்டாக்கி சுருக்கங்கள் உள்ள பகுதிகளில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து கழுவ சரும வறட்சி நீங்கி சுருக்கங்கள் நீங்கும்.
2. தக்காளியை நைசாக அரைத்து பேஸ்ட்டாக்கி வாயில் ஓரங்களில் மசாஜ் செய்து மீதியை முகத்தில் பேக் போட்டு கொண்டு 20 நிமிடங்கள் கழித்து கழுவ சரும சுருக்கங்கள் நீங்கும்.
3. ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் சூடான நீர் சேர்த்து கலந்து சுருக்கங்கள் உள்ள பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து நீரால் கழுவினால் சுருக்கங்கள் நீங்கும்.
4. பால் பவுடர், தேன் சேர்த்து கலந்து சுருக்கங்கள் உள்ள பகுதிகளில் பேக் போட்டு பத்து நிமிடங்கள் கழித்து காய்ந்ததும் கழுவலாம்.
5, பப்பாளி பழத்தை கூழாக்கி முகத்தில் பேக் போட்டு வர நாளடைவில் சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றம் கிடைக்கும்.
6. வாழைப்பழம், தேன் சேர்த்து கலந்து பேக் போட்டு வர வறட்சி நீங்கி சுருக்கங்கள் குறைந்து புத்துணர்வான சருமம் கிடைக்கும்.