செல்போன் பேசினால் ஆறு மாதம் சிறை

செல்போன் பேசினால் ஆறு மாதம் சிறை 

ஜப்பானில் உள்ள மக்கள் சைக்கிள் போக்குவரத்தையே பெரிதும் விரும்புகின்றனர் .

குறிப்பாக கொரோனா தொற்றுக்காலத்தில் பொது போக்குவரத்து முடங்கியது .

இதை அடுத்து அங்கு சைக்கிள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது.

 அதே சமயம் சைக்கிள் ஓட்டும் போது கவனக் குறைவால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்தது .

அதாவது கடந்த ஆண்டில் மட்டும் ஜப்பானில் சுமார் 72,000 சைக்கிள் விபத்துக்கள் பதிவாகியுள்ளன .

இந்த நாடு முழுவதும் ஏற்படும் மற்ற வாகன விபத்துகளின் 20% ஆகும்.

 இதனால் சைக்கிள் விபத்துகளை கட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்து ஆய்வினை மேற்கொண்டது.

 சைக்கிள் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்துவதே விபத்துக்கு முக்கிய காரணம் எனக் கண்டறியப்பட்டது.

 எனவே போக்குவரத்து விதிகளில் அங்கு புதிய திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 அதன்படி சைக்கிள் ஓட்டும் போது செல்போன் பேசவும் , இணையத்தை பயன்படுத்துவோம் செய்தல் கூடாது. மீறுபவர்களுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் .
இது தவிர மது போதையில் சைக்கிள் ஓட்டினாலும் மூன்று ஆண்டுகள் சிறதண்டனை விதிக்கும் வகையில் போக்குவரத்து விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

கருத்துரையிடுக

புதியது பழையவை