கைகளை தட்டுவதால் மேம்படும் ஆரோக்கியம்
கைகளை தட்டினால் ஆரோக்கியம் மேம்படுமா? ஆம் .
30 வினாடிகள் கைதட்டுவதன் மூலம் 10 மீட்டர் தூரம் ஓடுவதால் கிடைக்கும் பலன் நமக்கு கிடைக்கிறது.
நமது இரு கைகளிலும் தோராயமாக 340 மெரிடியன் புள்ளிகளும் 14 முழு உடல் உறுப்புகளுடன் இணைக்கப்பட்ட புள்ளிகளும் உள்ளன.
கைகளை தட்டும் போது இந்த புள்ளிகள் தூண்டப்பட்டு நமது ஆரோக்கியம் மேம்பட உதவியாக செயல்படுகின்றன.
நமது உள்ளங்கையில் வயிறு, கணையம், சிறுநீரகம், தொப்புள் மற்றும் பெருங்குடலுக்கான புள்ளிகளும், பெருவிரல் மற்றும் சுண்டுவிரல் நுனியில் பாதங்களுக்கான புள்ளிகளும் பெரு விரலின் கீழ் மூட்டு இணைப்பு பகுதியில் கல்லீரலுக்கான புள்ளிகளும், நடுவிரல் நுனியில் கண், மூக்கு, மூச்சுக் குழாய்க்கான புள்ளிகளும், விரலின் நடு மூட்டு பகுதியில் நுரையீரல் மற்றும் விரலின் கீழ் மூட்டு பகுதியில் இதயத்துக்கான புள்ளிகளும், ஆள்காட்டி விரல் மற்றும் மோதிர விரல் நுனியில் கைகள் மற்றும் மோதிர விரல் நடுமூட்டுப்பகுதியில் கண்களுக்கான புள்ளிகளும் அமைந்துள்ளன.
பலன்கள்
உள்ளங்கைகளையும், விரல்களையும் ஒன்றோடு ஒன்று சேர்த்து கட்டுவதால் மெரிடியன் புள்ளிகளில் தொடுதல் உணர்வு ஏற்படும்.
அதனால் ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது .
கைகளை தட்டும் போது தூண்டப்படும் மெரிடியன் புள்ளிகளால் குறைந்த இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை, செரிமான கோளாறு, தலைவலி மற்றும் இதய நோய்கள் போன்றவை வராமல் தடுக்க முடியும் .
விரல் நுனியில் கண்கள் மற்றும் மூக்கு ஆகியவற்றுக்கான மெரிடியன் புள்ளிகள் உள்ளன.
அவை கைதட்டுதலின் போது தூண்டப்பட்டு மூக்கில் ஏற்படும் நாசி அலர்ஜி , ரத்தப்போக்கு மற்றும் சைனஸ் பிரச்சனைகளை சீராக்குகின்றன.
அத்துடன் மைய நரம்பு மண்டலத்தில் செயல்பாட்டை ஊக்குவித்து ஆஸ்துமா போன்ற சுவாசம் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கவும் உதவுகின்றன.
உள்ளங்கைகள் உடலின் உள் உறுப்புகளுடன் இணைக்கப்பட்ட மெரிடியன் புள்ளிகளை கொண்டுள்ளன.
அவை உடலில் உள்ள உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துவதுடன் வாழ்வியல் நோய்களை கட்டுப்படுத்தவும் உதவி புரிகின்றன.
பின் கைகளைப் பயன்படுத்தி கைகளை தட்டும் போது எலும்புகளின் நலம் மேம்பட்டு முதுகு வலி மற்றும் இடுப்பு வலி குணமாகிறது.