ஆறு வேளை சாப்பிடுங்கள்

ஆறு வேளை சாப்பிடுங்கள் நீரழிவுக்கு சூப்பர் பிளான்

ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளின் பலன் இது.

 மூன்று வேளைக்கு பதிலாக ஆறு வேளை சாப்பிட்டாலும் அதே அளவு கலோரி உணவில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.

 நமக்காக வரையறுக்கப்பட்ட கலோர்களின் அளவை அதிகரித்துக் கொள்ளாமல் அந்த உணவு திட்டத்தை ஆறு வேளைகளுக்கு பொருந்தும் படி மாற்றியமைக்க வேண்டும்.

 அப்படி செய்கிறவர்களுக்கு ரத்த சர்க்கரையில் நல்ல கட்டுப்பாடு கிடைக்கும் .

பிரீ டயாபட்டிக் நிலையத்தில் இருக்கும் ஆரம்ப நிலை நீரழிவாளர்களுக்கும் பருமனாக உள்ளவர்களுக்கும் டைப் 2 வகை நீரழிவாளர்களுக்கும் ஆறு வேளை உணவு திட்டம் உகந்தது.

 இம்முறையை பரிசோதித்துப் பார்த்ததில் கிளைகேட்டட் ஹீமோகுளோபின் மற்றும் குளுக்கோஸ் அளவு கணிசமாக குறைந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

 பொதுவாக வயிறு நிரம்பி இருப்பது போலவே ஆய்வில் உட்படுத்தப்பட்டவர்கள் உணர்ந்தார்கள்.
 மிக முக்கியமான விஷயம் 24 வாரங்களில் இவர்களின் எடை அதிகரிக்கவில்லை.

கருத்துரையிடுக

புதியது பழையவை